மேட்டூர் அருகே, 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடியில், வீரக்கல் பேரூராட்சி தலைவர், அவர் மனைவி உட்பட, எட்டு பேர் மீதான புகார் குறித்து, உரிய விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூர், "கெம்ப்ளாஸ்ட்' நிறுவன தொழிலாளர்கள், 160 பேர் சேர்ந்து, 1995 மார்ச்,
27ல், வீரக்கல்புதூர் கிராமத்தில், 3.5 ஏக்கர் நிலம் வாங்கினர். இந்த நிலத்தை, 160 மனைகளாக பிரித்து, தனிப்பட்டா பெறுதல், நகரமைப்பு விதிப்படி, சாலை, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, 1996, ஏப்., 16ல், கெம்ப்ளாஸ்ட் சன்மார் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டது. அதன், தற்காலிக, தலைவராக ரங்கநாதன் நியமிக்கப்பட்டார்.
இவர், 3.5 ஏக்கர் நிலத்தை, தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொண்டதோடு, பட்டா, சிட்டா அடங்கலை, தன் பெயரில் இருந்து, வேறு பெயருக்கு மாற்றக் கூடாது என, மாவட்ட கலெக்டர் மற்றும் மேட்டூர் தாசில்தார் மீது, 1998 ஜூன், 3ல், மேட்டூர் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.விசாரணை முடிவில், ரங்கநாதன் பெயரில் இருக்கும் நிலத்தை, வேறு பெயருக்கு மாற்றக் கூடாது என, உத்தரவிட்ட நீதிமன்றம், அந்த சொத்து, ரங்கநாதனுக்கு உரிமையில்லை என, 2000 அக்.,13ல், தீர்ப்பளித்தது.இதை பொருட்படுத்தாத ரங்கநாதன், 2001 ஆக.,10ல், 3.5 ஏக்கர் நிலத்தை, தன் மனைவி ராஜகுமாரி,
மகன் தங்கமணி, மகள் மைதிலி பெயருக்கு, அடுத்தடுத்து, தான செட்டில்மென்ட் எழுதி வைத்து விட்டார்.
அதன் எதிரொலியாக, தற்காலிக தலைவர் பதவியில் இருந்து, ரங்கநாதன் தூக்கப்பட்டு, தலைவராக ராஜா, செயலராக சம்பத் ஆகியோர் நியமிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள், 3.5 ஏக்கர் நிலத்தை மீட்க, மேட்டூர் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.நீதிமன்றத்தில், எட்டு ஆண்டாக வழக்கு, நிலுவையில் இருந்த நிலையில், தலைவர் ராஜா, செயலர் சம்பத் ஆகிய இருவரும், பணத்துக்கு ஆசைப்பட்டு, மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.அதாவது, மோசடியாக, நங்கவள்ளி ஒன்றிய, அ.தி.மு.க., செயலரும், வீரக்கல்புதூர் பேரூராட்சி தலைவரான, எமரால்டு வெங்கடாசலம், அவரது மனைவி டெய்சிராணி ஆகியோருக்கு, 2010ல், பவர் எழுதி கொடுத்துள்ளனர். அந்த பவரை பயன்படுத்தி, மோசடியாக, நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு, 2.5 கோடி ரூபாய்.இது தொடர்பாக, வீட்டு வசதி சொசைட்டி சார்பில் நாராயணன், 2012 ஜூலை,7ல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிவில், இந்த சொத்து தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும், சேலம் மாவட்ட நில அபகரிப்பு மீட்புக்குழுவில், நாராயணன், ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கை சட்டப்படி விசாரணை மேற்கொண்டு, மேல்நடவடிக்கை எடுக்க, இன்ஸ்பெக்டர் குண÷
சகரனுக்கு உத்தரவு பிறப்பித்து, நீதிபதி ஆறுமுகசாமி, நவ., 29ல் தீர்ப்பளித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.