மதுரை: "விபத்தில் இறந்த, 24 வயது தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்தினருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம், 12 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ராஜபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ், 24. தனியார் மோட்டார் ஏஜன்சியில் மேலாளராக பணிபுரிந்தார். கடந்த 2007 நவ.,14 ல் டூவீலரில் சென்ற ரமேஷ், பஸ் மோதி பலியானார். இழப்பீடு கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் பெற்றோர் சண்முகவைகுண்டராமன், மங்கையர்க்கரசி மனு செய்தனர். ராஜபாளையம் தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், 14 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து இன்சூரன்ஸ் கிளை மேலாளர், ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி பி.தேவதாஸ் உத்தரவு:ரமேஷூக்கு திருமணம் ஆகவில்லை. அவர் மாதம் 9000 ரூபாய் சம்பாதித்துள்ளார். உயிருடன் இருந்திருந்தால், கூடுதலாக சம்பாதித்திருப்பார். இதை கணக்கில் கொண்டு கீழ்கோர்ட் 30 சதவீதம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. இழப்பீடு கணக்கிடும்போது, பெற்றோரின் ஆயுளை கணக்கில் கொள்ள வேண்டும். ரமேஷின் தந்தைக்கு 50, தாய்க்கு 44 வயதாகிறது. அவர்களுக்கு 3 வாரிசுகள் உள்ளனர். இதனால், தனிப்பட செலவுகள் கூடுதலாக இருக்கும்.ரமேஷ் வருமானத்தில், ஒரு பகுதியை தன் செலவிற்கு, வைத்துக்கொண்டு மீதி 2 பங்கை குடும்பத்திற்கு வழங்கியிருப்பார். அவர், குறிப்பிட்ட தொகையை சம்பாதித்தார் என்பதற்கான சான்றை, சமர்ப்பி
க்கவில்லை. பஸ் டிரைவர்தான் விபத்திற்கு காரணம். அவர் தவறை ஒப்புக்கொண்டுள்ளார். இன்சூரன்ஸ் நிறுவனம், இழப்பீடாக 12 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை, 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.