சென்னை: நடிகர் கவின் நடித்துள்ள, "பய புள்ள' படத்தை, மூன்று மாவட்டங்களில் வெளியிட, சென்னை, சிவில் கோர்ட் தடை விதித்துள்ளது.பய புள்ள படத்தில், நடிகர் கவின், நடிகை கவிதாஸ்ரீ, வடிவுக்கரசி ஆகியோர் நடித்துள்ளனர்.கே.எஸ்.சரவணன், இயக்கியுள்ளார். வரும், 28ம் தேதி, படம் வெளியாவதாக, விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவையைச் சேர்ந்த, வினியோகஸ்தர் கலைசெல்வி என்பவர், சென்னை, சிவில் கோர்ட்டில், தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:பய புள்ள படத்துக்கான, வினியோக உரிமை பெற்றுள்ளேன். இதற்காக, 7 லட்ச ரூபாய் கொடுத்துள்ளேன். ஜனவரியில், ஒப்பந்தம் கையெழுத்தானது. இம்மாதம், 28ம் தேதி, படம் வெளியிடப்படும் என, விளம்பரங்கள் வந்துள்ளன. எனக்கு ஒதுக்கப்பட்ட ஏரியாவில், படத்தை வெளியிட, தயாரிப்பாளர்கள் முயற்சிக்கின்றனர்.
எனவே, கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில், பய புள்ள படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஹாஜா முகைதீன் கிஸ்தி ஆஜரானார். மனுவை விசாரித்த, சிவில் கோர்ட், மூன்று மாவட்டங்களில், படத்தை வெளியிட தடை விதித்தது. விசாரணையை, ஜன., 11ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.