Nitish Kumar asks girls to learn martial arts for self-defence | தற்காப்பு கலைகள் கற்க மாணவிகளுக்கு நிதிஷ் அறிவுரை | Dinamalar

தற்காப்பு கலைகள் கற்க மாணவிகளுக்கு நிதிஷ் அறிவுரை

Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 தற்காப்பு கலைகள் கற்க மாணவிகளுக்கு நிதிஷ் அறிவுரை

பாட்னா: ""ஈவ்-டீசிங் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க, தற்காப்பு கலைகளை, பெண்கள் கற்று கொள்ள வேண்டும்,'' என, பீகார் முதல்வர், நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.பாட்னாவில் நேற்று, பள்ளி மாணவர்களுக்கான, டேக்வாண்டோ தற்காப்பு கலை, தேசிய போட்டியை துவக்கி வைத்த முதல்வர், நிதிஷ்குமார் கூறியதாவது:ஜுடோ, கராத்தே, டேக்வாண்டோ போன்ற தற்காப்பு, சண்டை பயிற்சிகளை அனைவரும் கற்று கொள்ள வேண்டும். ஈவ்-டீசிங் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க, பெண்கள் கண்டிப்பாக, இந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இதன் மூலம், நல்ல உடல் நலம், உஷார் நிலை, சுயபாதுகாப்பு போன்றவை பெண்களுக்கு கிடைக்கும். அதனால் தான், சில ஆண்டுகளுக்கு முன், பள்ளிகளில், தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகளை என் அரசு துவக்கியது.இவ்வாறு, நிதிஷ்குமார் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை