புதுடில்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, குளிர்கால சுற்றுப் பயணமாக, இன்று, ஆந்திராவுக்கு செல்கிறார்.ஆந்திர மாநிலம், செகந்திராபாத்தில், ஐதராபாத் நிஜாமுக்கு சொந்தமான, ஒரு பங்களா உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பின், இந்த பங்களா, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. இது, ராஷ்டிரபதி நிலையம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.ஜனாதிபதியாக பதவி வகிப்போர், குளிர்காலங்களில், இந்த பங்களாவில், சில நாட்கள் தங்குவது வழக்கம். இதுபோல், இந்தாண்டும், குளிர்கால பயணமாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்று, செகந்திரபாத் வருகிறார்.அடுத்த மாதம், 1ம் தேதி வரை, இங்கு அவர் தங்கியிருப்பார் என்றும், இங்கு இருந்தபடியே, ஜனாதிபதி அலுவல்களை மேற்கொள்வார் என்றும், ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவர் இந்திய நாட்டின் ஜனாதிபைதியா இல்லை காங்கிரஸ் கட்சியின் ஆலோசகரா.., எங்கெல்லாம் காங்கிரசுக்கு பிரச்சனை இருக்கிறதோ அங்கெல்லாம் இவர் செல்கிறார்.. ( இப்போது ஆந்திரா முதல்வர் பதவிக்கு வந்த ஆபத்தை பற்றி ஆலோசனை நடத்த அங்கு செல்கிறார்... எதற்கு முன்பு தமிழ்நாட்டுக்கு திரு முக வீட்டுக்கு வந்து அந்நிய முதலீட்டுக்கு ஆதரவு வாங்கினார்..) இவர் காங்கிரஸ் கட்சிக்கு வேலைபார்க்க மக்கள் வரிப்பணம் வீண்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.