ஆமதாபாத்: குஜராத் முதல்வராக, நரேந்திர மோடி இன்று நான்காவது முறையாக பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட, பலர் பங்கேற்கின்றனர். குஜராத்தில், சமீபத்தில், நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 182 தொகுதிகளில், 115 இடங்களில், வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம், மூன்றாவது முறையாக தன் தலைமையில், சட்டசபை தேர்தலை சந்தித்து, பெரும் வெற்றி பெற்று, "ஹாட்ரிக்' சாதனை படைத்தார் முதல்வர் நரேந்திர மோடி.இந்நிலையில், தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம், நேற்று காந்திநகரில் நடந்தது. ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர், அருண்ஜெட்லி உட்பட, மத்திய பார்வையாளர்கள் பலர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பா.ஜ., சட்டசபை கட்சித் தலைவராக நரேந்திர மோடி முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து, குஜராத் முதல்வராக, நான்காவது முறையாக, மோடி இன்று பதவியேற்கிறார். அவருக்கு கவர்னர், கமலா பெனிவால், பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.நரேந்திர மோடி, 2001ல் முதல் முறையாக முதல்வராக பதவியேற்றார். அப்போது, அவர் எம்.எல்.ஏ.,வாக இல்லை. அதன்பின், இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, 2002 மற்றும் 2007ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்றி முதல்வரானார். தற்போதைய தேர்தல் வெற்றி மூலம், நான்காவது முறை முதல்வராகிறார்.காந்திநகரில் நடக்கும் பதவியேற்பு விழாவில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்கள் உட்பட, பலர் பங்கேற்கின்றனர்.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.