புதுடில்லி: முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான, அடல் பிகாரி வாஜ்பாய், நேற்று தன், 88வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு, ஜனாதிபதி, பிரதமர், கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் நகரில், 1924 டிசம்பர், 25ம் தேதி பிறந்த வாஜ்பாய், நாட்டின் உயரிய அரசியல் தலைவர்களில் ஒருவர். உடல் நலக்குறைவால், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, டில்லியில், தன் வளர்ப்பு மகளுடன் வசித்து வரும் வாஜ்பாய், நேற்று தன், 88வது பிறந்த நாளை கொண்டாடினார்.வாழ்த்து தெரிவித்து, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, மலர் கொத்து அனுப்பியிருந்தார். பிரதமர், மன்மோகன் சிங், வாஜ்பாய் வீட்டிற்கு சென்று, 15 நிமிடங்கள் பேசினார்.பா.ஜ., முன்னணி தலைவர்கள் வாழ்த்து கூறினர். அப்போது அவர்களை, வாஜ்பாய், புன்னகையுடன் வரவேற்றதாக, அந்த தலைவர்கள் தெரிவித்தனர்.பீகார் முதல்வர், நிதிஷ்குமார், பிற கட்சிகளின் தலைவர்களும், வாஜ்பாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.இமாச்சல பிரதேச மாநிலம், பிரினி என்ற இடத்தில், வாஜ்பாய்க்கு சொந்த வீடு உள்ளது. அந்த கிராம மக்கள், பிறந்த நாளை, வெகு விமரிசையாக கொண்டாடினர்.மத்திய பிரதேசத்தில், முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையில், அமைச்சர்கள் இனிப்பு பரிமாறினர். வாஜ்பாய்க்கு, "பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும் என, முதல்வர் சவுகான் கோரிக்கை விடுத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.