புதுடில்லி: டில்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக, கடும் பனிப்பொழிவு காரணமாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது; இதனால், பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். உத்தர பிரதேசத்தில், நேற்று காலையுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், கடும் குளிருக்கு, ஏழு பேர் பலியாயினர்.டில்லி உட்பட, வட மாநிலங்களில், கடும் பனிப்பொழிவோடு, கடும் குளிர் காற்று வீசி வருகிறது. டில்லியில், கடந்த மூன்று நாட்களாக நிலைமை மோசமாக உள்ளது. டில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. அரை மணி நேரம் முதல், ஐந்து மணி நேரம் வரை, விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் இருந்தது. இந்த வகையில், 29 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. 10 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.நேற்று முன் தினம், இரவு 10 மணி முதல் பனி இறங்கி கொண்டிருந்தாலும், விமான ஓடு பாதைகள் தெளிவாக இருந்ததால், விமானங்கள் செயல்பாட்டில் பாதிப்பில்லை. ஆனால், இரவு, 11:21 மணிக்கு பிறகு தான் நிலைமை மோசமாக துவங்கியது. விமான ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனி மூட்டம் சூழ்ந்தது. நள்ளிரவு, 12:30 மணிக்கு மோசமானது. பிறகு, நள்ளிரவு, 1:30 மணிக்கு பிரதான விமான ஓடுபாதை தெளிவாக தெரிந்தது. அப்போது விமான சேவைகள் துவங்கின. ஆனால், மூன்றாவது ஓடுபாதையில், காலை, 5:30 மணிவரை பனிமூட்டம் சூழ்ந்து இருந்தது.நேற்று முன் தினம் மட்டும், 140 விமானங்களின் விமான சேவை பாதிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் விடுமுறையை யொட்டி, வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லவிருந்த பயணிகள், இதனால், பெரிதும் பாதிக்கப்பட்டனர்.உத்தர பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில், குறைந்தபட்ச வெப்பநிலை, 5 முதல் 12 டிகிரி செல்சியசாகவே இருந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.