Advertisement
வினோத நோயால் மும்பையில் அவதிபடும் தமிழ் குழந்தை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2012,23:26 IST

மும்பை: மும்பையில் வசிக்கும் தமிழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை, பிறந்தது முதல், ஐந்து மாதங்களாக, வினோத நோயால் பாதிக்கப்பட்டு, நாளுக்கு நாள் உருக்குலைந்து வருகிறது. அந்த குழந்தைக்கு என்ன நோய் என்பதை, இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை.தமிழகத்தை சேர்ந்த பரத் கண்ணன், 32, இசைமாலா, 23, தம்பதிக்கு, ஜூலை, 25ல் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தமிழகம் வந்திருந்த இசைமாலாவுக்கு, 3.2 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தைக்கு, ராகுல் கண்ணன் என, பெயர் வைத்தனர்.பிறந்தது முதல் தொடர்ந்து வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டு வரும் இந்த குழந்தைக்கு, இது வரை வயிற்றுப்போக்கு நிற்கவே இல்லை. இதற்காக, தமிழகத்தின் பல நகரங்கள், மும்பையில் பல இடங்களில் சிகிச்சை அளித்தும், குழந்தையின் வயிற்றுப்போக்கு நிற்கவே இல்லை.பிறந்த போது, 3.2 கிலோ எடையில் இருந்த ராகுல் கண்ணன், இப்போது, 2 கிலோ அளவில் தான் உள்ளான். உடலில் எலும்பு மட்டும் தான் இருக்கிறது. சாப்பிடும் பால் மற்றும் உணவுகள், அடுத்த நிமிடத்திலேயே வெளியேறி விடுவதால், உடலில் சத்து சேராமல், எலும்பும், தோலுமாக காட்சியளிக்கிறது, அந்த குழந்தை.இதற்காக அந்த ஏழை தமிழர் தம்பதி, மும்பையின் முன்னணி மருத்துவமனைகளில், தங்கள் குழந்தையை அனுமதித்து பார்த்தும், பயனில்லை. தனியார் மருத்துவமனையில் சேர்த்து பார்க்க, மேற்கொண்டு பணமில்லாததால், சியான், அரசு மருத்துவமனையில், குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை.இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், "குழந்தையின் உடல் எடை மிகவும் குறைவாக இருப்பதால், எந்த மருந்தும் கொடுக்க முடியவில்லை. வாய் வழியாகவும் கொடுக்க முடியாத நிலை காணப்படுவதால், சிகிச்சை அளிக்கவே சிரமமாக உள்ளது' என்றனர்.டாக்டர் அல்கா யாதவ் கூறும்போது, ""பிற குழந்தைகளை விட, இந்த குழந்தைக்கு, சிறுகுடல் மிகவும் சிறியதாக உள்ளது தான் பிரச்னைக்கு காரணம். அதை எவ்வாறு சரி செய்வது என, யோசித்து வருகிறோம். இந்தியாவில் இதற்கு சிகிச்சை இருப்பதாக தெரியவில்லை; வெளிநாடுகளில் இருக்கிறது. செலவு செய்ய, அந்த ஏழை குடும்பத்தால் முடியாது,'' என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.