தண்டவதே: சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்ட்களை அடக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள, மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில், தூங்கி கொண்டிருந்த போலீசார் மீது, மனநிலை பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் ஒருவர் சரமாரியாக சுட்டதில், நான்கு போலீசார் பலியாயினர்.சத்தீஸ்கர் மாநிலம், தண்டவதே மாவட்டத்தில், மாவோயிஸ்ட்கள் நடவடிக்கைகள் அதிகம் உள்ளன. இவர்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம், தண்டவதேயில் அமைக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, "ஷிப்ட்' முறையில் பணியாற்றி வருகின்றனர். இதில், 111 பட்டாலியனை சேர்ந்த போலீசாரின் முகாமில், இரவு பணி முடித்து, போலீசார் தூங்கி கொண்டு இருந்தனர். இதில், தீபக்குமார் திவாரி என்ற போலீஸ்காரர், திடீரென எழுந்தார். வெறி பிடித்தவர் போல் ஓடியவர், அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து, தூங்கி கொண்டிருந்த போலீசார் மீது சரமாரியாக சுட ஆரம்பித்தார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு, முகாமிற்கு வெளியே பாதுகாப்புக்கு நின்றிருந்தவர்கள் ஓடிவந்தனர். அப்போது, வெறி பிடித்தது போல் நின்றிருந்த தீபக் குமாரை, சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடமிருந்து துப்பாக்கியை பறித்தனர். தீபக் குமார் துப்பாக்கியால் சுட்டதில், மூன்று போலீசார் அந்த இடத்திலேயே, குண்டு பாய்ந்து பலியாயினர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மேலும், குண்டு பாய்ந்த சிலர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீபக் குமார் திவாரி, லக்னோவைச் சேர்ந்தவர், பணிச்சுமை காரணமாக, மன உளைச்சல் ஏற்பட்டு, மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் என, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.