சபரிமலை: சபரிமலையில், இன்று மண்டல பூஜை நடக்கிறது. சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, நடைபெறும் பூஜைக்குப் பின், இரவு நடை அடைக்கப்படும்.சபரிமலை அய்யப்பன் கோவிலில், நவம்பர், 16-ம் தேதி மண்டல உற்சவம் துவங்கியது. அன்று முதல், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சபரிமலை வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மண்டல உற்சவத்தின் நிறைவாக, இன்று மதியம், 12:30 மணிக்கு, மூலவரான அய்யப்பனுக்கு மண்டல பூஜை நடக்கிறது.இந்த பூஜையின் போது, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள தங்க அங்கி, அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும். மண்டல பூஜை முடிந்ததும், இரவு, 10:00 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.மகர ஜோதி உற்சவத்திற்காக, வரும், 30ம் தேதி கோவில் நடை திறக்கப்படும். மண்டல உற்சவம் முடிந்து, நான்கு நாட்கள் கோவில் நடை மூடப்பட்டிருக்கும் போது, சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.