அலகாபாத்: ""எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது; இளைஞர்கள், தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும்,'' என, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி கூறினார்.உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத்தில் உள்ள, மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின், பட்டமளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற, ஜனாதிபதி முகர்ஜி பேசியதாவது:டில்லியில், மருத்துவ மாணவிக்கு நடந்த கொடூரம், மிக மோசமானது. அதுபோன்றதொரு சம்பவம் எதிர்காலத்தில் நடக்கக் கூடாது. அந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, இளைஞர்கள் காட்டிய ஒற்றுமையான எதிர்ப்பை, நான் பாராட்டுகிறேன்.ஆனால், போராட்டம் நடத்திய இளைஞர்களால், போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்டு, இன்று இறந்துள்ளார். அவரின் உயிர், போராட்டம் என்ற பெயரில் பறிக்கப்பட்டுள்ளது. இதை அனுமதிக்க முடியாது.எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது; இளைஞர்கள், தங்கள் கோப உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும்; இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்களை மதிக்கும் பழக்கத்தை, அனைவரும் கற்று கொள்ள வேண்டும்.இந்த பெருமை வாய்ந்த கல்வி நிறுவனத்தில், 8 சதவீதம் மட்டுமே, பெண்கள் படிப்பதாக அறிந்தேன். இது மிகவும் கவலை அளிக்கிறது. வருங்காலங்களில், பெண்கள் அதிகமாக படிக்க வேண்டும்.இவ்வாறு, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.