one held sold on TTDS ticket by black | ரூ.300 டிக்கெட்டை, 10 ஆயிரத்திற்கு விற்க முயன்ற ஊழியர் சிக்கினார் | Dinamalar

ரூ.300 டிக்கெட்டை, 10 ஆயிரத்திற்கு விற்க முயன்ற ஊழியர் சிக்கினார்

Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நகரி: திருப்பதி, திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் தரிசனத்திற்காக வழங்கப்பட்ட, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டை, 10 ஆயிரம் ரூபாய்க்கு கள்ளத் தனமாக விற்க முயன்ற, தேவஸ்தான ஊழியர், லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் சிக்கினார்.சொர்க்க வாசல் தரிசனத்திற்காக வினியோகிக்கப்பட்ட, ஆறு 300 ரூபாய் டிக்கெட்டுகளை, கள்ளத்தனமாக பெற்ற, திருப்பதி தேவஸ்தான ஊழியர் சுதாகர், அவற்றை, நேற்று முன் தினம் பெங்களூரை சேர்ந்த பக்தர் ஒருவரின் குடும்பத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயற்சித்து, அவர்களிடம் பேரம் பேசினார்.இதை கவனித்த, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், சுதாகரை பிடித்தனர். விசாரணை நடத்தியதில், பெங்களூரை சேர்ந்த பக்தருக்கு அவர், 10 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட்டுகளை விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, சுதாகர் மீது நடவடிக்கை எடுக்க, தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை