Today Tsunami Memorial day | பேரலை என்ற பேயலை: இன்று சுனாமி நினைவு தினம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேரலை என்ற பேயலை: இன்று சுனாமி நினைவு தினம்

Added : டிச 25, 2012 | கருத்துகள் (7)
Advertisement
பேரலை என்ற பேயலை: இன்று சுனாமி நினைவு தினம்

எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்கள் கேள்விப்படாத வார்த்தை சுனாமி. 2004 டிச., 26ம் தேதி, "கடல் அலை' கோபம் கொண்டு ஊருக்குள் வந்த போது தான் தெரிந்தது, அது தான் சுனாமி என்று. இதன் கோபமோ வெறும் பத்து நிமிடம் தான். அது ஏற்படுத்திய சோகம், மக்கள் மனதில் இருந்து என்றுமே அழியப் போவதில்லை.

சமீபத்தில் கூட, அதே சுமத்ரா தீவில் பூகம்பம் ஏற்பட்டு, தமிழகத்தின் பல நகரங்களில் அதிர்வு உணரப்பட்டது. இந்தியா உள்ளிட்ட 42 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, வாபஸ் பெறப்பட்டது. தற்போது சுனாமி என்றாலே குலைநடுங்கும் நிலை வந்துவிட்டது. சுனாமி என்பது ஜப்பானிய மொழிச் சொல். "துறைமுக அலை' எனப் பொருள். "ஆழிப்பேரலை' எனவும் அழைக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து எழும்பிய பேரலைகள், இந்தோனேசியா, இந்தியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்திய துணைக்கண்டத்தில் மட்டும், 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் இறந்தனர். இது, உலகின் மோசமான இயற்கை சீரழிவுகளில் 6வது இடம் என்ற சோகமான சாதனையைப் பெற்றது.


தமிழகம் அதிகம் :

இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சுனாமி தாக்கியது. இந்தியாவில் 12 ஆயிரம் பேர் பலியாக, தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் இறந்தனர். பூகம்பம் மூன்று விதங்களில் ஏற்படுகிறது. தரைப் பகுதியில் ஏற்படும் போது, நிலம் பிளவுபட்டு கட்டடங்கள் தரைமட்டமாகின்றன. மலைப்பகுதியில் ஏற்படும்போது எரிமலை உருவாகிறது. இதுவே கடலில் ஏற்படும் போது, சுனாமி உருவாகிறது.


இன்னும் வேகம்:

ஆழிப் பேரலையின் வேகம் ஆரம்பித்த இடத்திலிருந்து கரையை நெருங்க, நெருங்க அதிகரிக்கும். சாதாரணமாக கடல் அலையின் உயரம் 7 அடி எழும்பும்; கொந்தளிப்பாக இருந்தால் 10 அடி இருக்கும். ஆனால் சுனாமியின் போது, 100 அடி உயரத்துக்கு அலை எழும்பியது. சுனாமி, சில நொடிகளில் அதிக கொள்ளவு தண்ணீரை கரைக்கு தள்ளுகிறது.


எச்சரிக்கலாம்:

சுனாமியை தடுக்க முடியாவிட்டாலும், அது வருவதற்கு முன் கண்டறிந்து, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றலாம். கடலில் பூகம்பம் ஏற்பட்டவுடன், பேரலைகள் உருவாகின்றனவா என கண்டறிய எச்சரிக்கை கருவிகள், கடல்களில் அமைக்கப்பட்டுள்ளன. இது, கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கும். இதன் அடிப்படையில், அலைகளின் மாற்றத்தை விஞ்ஞானிகள் அறிந்து, பாதிப்பை ஏற்படுத்தும் என உணர்ந்தால், மக்களை எச்சரிக்கின்றனர். இதனால், அழிவின் அளவை வெகுவாக குறைக்கலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bava Husain - riyad,சவுதி அரேபியா
26-டிச-201212:38:41 IST Report Abuse
Bava Husain சுனாமியில் இறந்த அனைவருக்கும் இறைவன் சாந்தி நல்கட்டும். அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel
siva gopi - madagascar  ( Posted via: Dinamalar Android App )
26-டிச-201212:37:05 IST Report Abuse
siva gopi im very sad ..............?
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
26-டிச-201212:20:25 IST Report Abuse
Guru ஒரு கருப்பு தினம்...,
Rate this:
Share this comment
Cancel
Muba - BADDI, HIMACHAL,இந்தியா
26-டிச-201210:37:13 IST Report Abuse
Muba எட்டு ஆண்டு முன்பு எழுந்து வந்த கடல் அலைகளின் கோபத்தில் காணாமல் போன உயிர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.
Rate this:
Share this comment
Cancel
Nandu - Chennai,இந்தியா
26-டிச-201210:30:14 IST Report Abuse
Nandu காற்றுக்கும் நீருக்கும் பிறப்பதற்குப் பெயர் தான் அலை. நிலத்திற்கும் கடல் நீருக்கும் பிறப்பது கடற்கோள். கடற்கோளை ஏன் அலை, ஆழிப் பேரலை, பேரலை என புதிது புதிதாக பெயரிட்டு அழைக்கிறீர்கலென எனக்கு புரியவில்லை.
Rate this:
Share this comment
anandhaprasadh - Bangalore,இந்தியா
26-டிச-201212:18:50 IST Report Abuse
anandhaprasadhரொம்ப முக்கியம்.. செய்தில இருக்கும் சோகத்தைப் பாருங்கப்பா......
Rate this:
Share this comment
Cancel
indian - chennai,இந்தியா
26-டிச-201210:09:13 IST Report Abuse
indian 2004 இல் நடைந்த இந்த துயர சம்பவம் இன்னும் என் மனதில் மறையவே இல்லை. அனைவரது ஆத்மா அமைதியாக இவ்வுலகில் எல்லோருக்கும் நல்ல வழி காட்ட, கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை