Muslim girl sings in Karnatic songs | கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி

Added : டிச 25, 2012 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி,Muslim girl sings in Karnatic songs

கோழிக்கோடு : கேரளாவை சேர்ந்த முஸ்லிம் மாணவி, 60க்கும் மேற்பட்ட, கர்நாடக இசை கச்சேரிகளை நடத்தி, இசை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

கேரள மலப்புரம் மாவட்டம், வடக்கன்கரா என்ற இடத்தை சேர்ந்த, கருவட்டில் யாசிர் - சகீரா தம்பதியின் மகள், ஹன்னா யாசிர். மலப்புரத்தில் உள்ள, மேல் நிலை பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், கேரளா மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும், 60க்கும் மேற்பட்ட, கர்நாடக இசை கச்சேரிகளில் பாடியுள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக, கர்நாடக இசை பயின்று வரும் இந்த முஸ்லிம் மாணவி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கர்நாடக இசை கச்சேரிகளில் பாடி வருகிறார். பாரம்பரிய முஸ்லிம் பெண் போல, முகத்தை மட்டும் வெளியே காட்டியவாறு, மேடைகளில், கீர்த்தனைகளையும், ஆலாபனைகளையும் அருமையாக இசைத்து, இசை ரசிகர்களை மகிழ்ச்சியூட்டி வருகிறார்.

""இசைக்கு முன், மதம் கிடையாது; நான் முஸ்லிமாக இருப்பதால், எனக்கு, கர்நாடக இசை பாடல்களை கற்பதிலும், பாடுவதிலும் எந்த கஷ்டமும் இல்லை. அதுபோல, முஸ்லிம் உடையில் மேடையில் தோன்றுவதில் எந்த சிரமமும் இல்லை; என் ரசிகர்களுக்கும் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை,'' என்கிறார், இந்த மாணவி.கர்நாடக இசை மட்டுமின்றி, கிறிஸ்தவ பாடல்களையும், முஸ்லிம் மத வழிபாட்டு பாடல்களையும் கற்று தேர்ந்துள்ள ஹன்னா, கேரள மாநிலத்தின் இசை குயிலாக பாராட்டப்படுகிறார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skv - Bangalore,இந்தியா
14-பிப்-201308:24:01 IST Report Abuse
Skv இசைக்கு சாதி மதம் ஏதும் இல்லே , வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
Meto Enjoy - Singapore,சிங்கப்பூர்
13-பிப்-201309:15:26 IST Report Abuse
Meto Enjoy இது ஒரு கலை. அதை ஒரு இந்தியர் செய்கிறார். அதில் எதற்கு அந்த கலைஞர் சார்ந்த மதத்தை சம்பந்த படுத்தி தலைப்பு போடுகிறார்கள் என்றே தெரியவில்லை. இது சரியா ?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Dhakshnamoorthy - Kuala Lumpur,மலேஷியா
26-ஜன-201315:15:06 IST Report Abuse
Srinivasan Dhakshnamoorthy கபீர் வரவேற்கிறோம் உங்கள் கருத்தை ....அப்படியே உங்கள் சாககளுகும் தெரிய படுத்துங்கள் ......இந்த சிறுமி மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Ravi - Doha,கத்தார்
26-ஜன-201310:09:41 IST Report Abuse
Ravi ""இசைக்கு முன், மதம் கிடையாது நான் முஸ்லிமாக இருப்பதால், எனக்கு, கர்நாடக இசை பாடல்களை கற்பதிலும், பாடுவதிலும் எந்த கஷ்டமும் இல்லை. அதுபோல, முஸ்லிம் உடையில் மேடையில் தோன்றுவதில் எந்த சிரமமும் இல்லை என் ரசிகர்களுக்கும் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை,'' பாராட்டுக்கள் அந்த மாணவிக்கும் தினமலருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Vaanjinathan - Bangalore,இந்தியா
28-டிச-201217:01:44 IST Report Abuse
Vaanjinathan Shaikh Cஹின்னமௌலான அவர்களின் நாதஸ்வரத்துக்கு நானும் என்னைப்போல் பல கர்நாடக இசை பிரியர்கள் பெரிய விசிறிகள். செல்வி ஹன்னாவும் அதுபோல் இத்துறையில் மேலும் புகழ் பெற்று விளங்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த குழந்தயின் பெற்றோர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்.
Rate this:
Share this comment
Cancel
vaaimai - Appleton, WI ,யூ.எஸ்.ஏ
27-டிச-201202:44:53 IST Report Abuse
vaaimai கர்நாடக இசை, வடக்கத்திய பாரம்பரிய இசை, மேற்கத்திய இசை இவையெல்லாம் அறிவியலின் பிரிவும் ஆகும் அழகுக்கலைகளுமாகும். இவை மதம், இனம், முதலியவற்றை முற்ற, முழுக்கக் கடந்து திகழ்பவை. அறிவியலும், கலைகளும் உலகத்துக்கே பொது.
Rate this:
Share this comment
Cancel
Salai.Mohamed Mohideen - Dallas,யூ.எஸ்.ஏ
27-டிச-201202:29:45 IST Report Abuse
Salai.Mohamed Mohideen மாற்று மதத்தை சார்ந்த சிலர் (குறிப்பாக பெயர் தாங்கிகள்) தான் சார்ந்த ஹிந்து மதத்தின் எதையாவது ஒன்றை செய்து விட்டால்... தினமலருக்கு அல்வா சாப்பிட்டது மாதிரி. அச்செய்தியை தன்னுடைய எல்லா இதழ்களிலும் வெளிவரச்செய்து மிகைப்படுத்தி ஊதிப் பெரிதாக்கி விடும் பாணியே.... தனிதான். இவரை பொறுத்த வரை பாடுவது ஒரு தொழில் அல்லது தனி நபர் விருப்பம். இதற்க்கும் ஜெய்ஹிந்த் என்று ஒன்று படுவதற்கும் என்ன சம்பந்தம்? இசை பிடிக்காதவர்கள் இந்தியர்கள் இல்லையா? "இசைக்கு முன், மதம் கிடையாது" என்று கூறுவதே ஒருவரின் மத நம்பிக்கையை பின்னுக்கு தள்ளி விட்டது. பாடுவதை பொறுத்த மட்டில் சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியை வழங்கி இருக்கின்றது. அதில் முதல் நிபந்தனையே இறைவனுக்கு இணைவைத்தல் இருக்க கூடாது. கீர்த்தனை, கிருத்துவ பாடல்கள் எவ்வகையை சார்ந்தது? அடிப்படையே ஆட்டம் கண்டு விட்டால் மற்றவைகள் (ஹிஜாப்) .... ? "இத ..இதத்தான் ...எதிர்பார்க்கிறோம்" - ஒரு தனி மதம் சம்பந்த பட்ட (இறை நிராகரிப்பு) கீர்த்தனைகளை பஜனைகளை மாற்று மதத்தினர் (குறிப்பாக ஓரிறை கொள்கையினர்) பாடுவதன் மூலம் தான் 'இந்தியன் என்ற சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும்' அடைய முடியுமா அல்லது அதற்கான அளவுகோல் தான் இது போன்ற செயல்களா? பிற சமுதாயத்தினரிடம் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் எப்படி பேணி பாதுகாக்க வேண்டும் என்று அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லித்தந்ததை விடவா புதிதாக நாம் கூறப் போகின்றோம் ? எத்தனை காலம் தான் இப்படியே கூறித்திரிய போகின்றோம். நம் தேசத்தில் மதமே இல்லையென்று கூறும் சகோதரர்கள் கூட இருக்கிறார்கள். மத நல்லிணக்கம் என்பதனை விட சமூக நல்லிணக்கத்திற்கு வழிவகுப்போம். பிற மொழி மத இன கலாச்சாரத்தை நடைமுறை படுத்துகின்றோம் என்ற பெயரில்... அந்நிய மண்ணில் (Ex :அமெரிக்கா) தன் தாய்நாட்டின் தனித்துவத்தை தொலைத்தது எத்தனை பேர் ? எல்லா மதத்தினரையும் மதத்தை சாராதவரையும் மதித்து மனித நேயம் பேணுவோம். பொதுவான நன்மையான விசயங்களில் ஒன்றிணைந்து செயலாற்றுவோம். அதுவே (சமூக நல்லிணக்கமே) வளமான இந்தியாவை உருவாக்கும் பலமான ஆயுதம்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
26-டிச-201212:23:45 IST Report Abuse
Nallavan Nallavan இந்து மதம் சார்ந்த ஒரு கலையை அவர் பயின்று நிபுணத்துவம் பெற்று அக்கலையைத் தொழிலாக ஏற்றுள்ளார் ( யோகா கற்ற நம்மில் பலரை விட ) திறம்பட யோகக்கலையைப் பயின்று அதில் தனது உன்னத அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டுள்ள அமெரிக்கர்கள் பலர் இதில் என்ன மத நல்லிணக்கம் உள்ளது?
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
26-டிச-201212:20:58 IST Report Abuse
Guru வாழ்த்துக்கள் சகோதரி.. வாழ்த்துக்கள்.., பல மததவர் ஒற்றுமை காக்கும் ஒரே அண்ணை பூமி நம் இந்தியா
Rate this:
Share this comment
Cancel
Sivakumar Ayyar - mahboula,குவைத்
26-டிச-201211:46:54 IST Report Abuse
Sivakumar Ayyar கேரளாவில் மக்கள் அனைவரும் - அவர்கள் கிறிஸ்துவர்களாக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் - கர்நாடக சங்கீதம் கற்பதில் ஒரு பேதமும் பார்ப்பதில்லை. இது அந்த மண்ணுக்கு உண்டான சிறப்பு. அதனால்தான் அங்கிருந்து மிகச் சிறந்த கலைஞர்கள், பாடகர்கள் உருவாகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை