E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2012,23:44 IST
கருத்துகள் (6)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

குஜராத் மாநிலத்தைப் பின்பற்றி, நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதில், புது நடைமுறையை அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.


மக்கள் தொகை அதிகரிப்பு:தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், 48.44 சதவீதம் பேர், நகர்ப்புற பகுதிகளில் வசிக்கின்றனர். அடுத்த சில ஆண்டுகளில், இது, 55 சதவீதமாகஅதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இவர்களின் தேவைக்கு ஏற்ப, நகர்ப்புற பகுதிகளில், உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப் படவில்லை. நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பேருந்து நிறுத்தங்கள் அமைப்பது; மெட்ரோ ரயில், மோனோ ரயில், புறவழிச்சாலைகள் போன்ற திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை, தனியாரிடம் இருந்து கையகப்படுத்துவதில், ஏற்படும் சிக்கல்களே, இதில் முக்கிய பிரச்னைகளாக உள்ளன.

குஜராத் வழியில்...:குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், நகர்ப்புற வளச்சித் திட்டங்களுக்கு நிலம் எடுப்பதில் கடைபிடிக்கும் நடைமுறைகள், நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளன. அங்கு முழுமை

திட்டத்துக்கு அடுத்தபடியாக, நகர்ப்புற மேம்பாட்டுதிட்டம்உருவாக்கப்படுகிறது.எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிலங்கள் கண்டறியப்பட்டு, சர்வே எண்கள் அடிப்படையில் பட்டியலிடப்படுகின்றன.இதில், அரசு திட்டத்துக்கு தேவையான அளவு போக, மீதியுள்ள நிலங்களை அதன் உரிமையாளர்களுக்கே சீரமைக்கப்பட்ட மனைகளாக திருப்பித் தரப்படுகின்றன.இதனால், மேம்பாட்டுத் திட்டத்தால் தாங்கள் வெளியேற்றப்படுவோம் என்ற அச்சம்தீர்க்கப்பட்டு, தேவையான நிலங்கள், எவ்வித சிக்கலும் இன்றி கையகப் படுத்தப் பட்டு பயன்படுத்தப்படுகிறது.சில ஆண்டுகளுக்கு முன், அங்கு சென்று, இத்திட்டத்தை ஆய்வு செய்த சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், இது குறித்த, விவர அறிக்கையை தமிழக அரசுக்கு அளித்தனர்.இதே சமயத்தில், நகரமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் குழு, நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் எடுக்க, இதற்கென நில தொகுப்புகளை உருவாக்கலாம் என்று சிபாரிசு செய்துள்ளது.இதற்காக நகரமைப்பு சட்டத்தின்,

Advertisement

"36அ' பிரிவில் உட்பிரிவு ஒன்றை சேர்க்க பரிந்துரைத்திருக்கிறது.

புதிய நடைமுறை:இது குறித்து, நகரமைப்புத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இதன்படி, நகர்ப்புறப்பகுதிகளில் எதிர்காலதிட்டங்களுக்கு தேவையான நிலங்களை கண்டறிந்து, அது குறித்த சர்வே எண்கள் அடங்கிய ஒரு தொகுப்பை உருவாக்கப்படும்.அதில் தேவையான அளவை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதி நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடமேதிரும்ப அளிக்கலாம்.மேலும், வருவாய்த்துறையை சார்ந்திராமல், நகரமைப்புத்துறை மூலமே நிலங்களை விரைந்து கையகப்படுத்தலாம்.மேலும், புதிய மனைப்பிரிவு, குடியிருப்புத்திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் நிலையிலேயே, எதிர்கால திட்டங்களுக்கான நிலங்கள்,கண்டறியப்பட்டு கையகப் படுத்தப்படும்.இதன் அடிப்படையில், நிலத்தொகுப்புகளை உருவாக்குவதற்கான வரைவுத்திட்ட அறிக்கை, நகரமைப்புத்துறை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த அறிக்கை சட்டத்துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.அதன் ஒப்புதல் கிடைத்தவுடன், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் அரசாணையாக வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshmi Narasu - chennai,இந்தியா
26-டிச-201220:09:52 IST Report Abuse
Lakshmi Narasu நல்ல முடிவு
Rate this:
1 members
0 members
2 members
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
26-டிச-201214:37:21 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar வரவேற்க படவேண்டியவை..,பல பிரச்சனைகள் தீர அரசு துறைகளிடைய ஒருகினைப்பும் ஒத்துழைப்பு மிக அவசியம்.., இக் குறை களைத்து அரசு உயர் அதிகாரிகள் சிறந்து செயல் பட்டால்.., இங்கு சரியான ஆய்வுக்கள் பொதுமக்கள் கருத்துகள் கேட்டலே போதும் சிறப்பான திட்டம் உண்டாகும் - சிறப்பான சட்டம் உண்டாகும் - பூபதியார்
Rate this:
1 members
0 members
3 members
Cancel
Rajendran Chinnasamy - Coimbatore,இந்தியா
26-டிச-201213:52:30 IST Report Abuse
Rajendran Chinnasamy இனி மேல் எடுக்கப்படும் நிலங்களுக்கு அம்மா அவர்கள் செய்யும் முயற்சிகள் சரிதான் ஆனால் கோவையில் ஹட்கோ வினால் ஆர்ஜிதம் செய்யப்பட்டு மூன்று தலைமுறைகளாக நஷ்ட ஈடு தராமல் கோர்ட்டில் இருக்கும் பீளமேடு ஹட்கோ இடத்திற்கும் அது போலவே இடத்தை கொடுத்துவிட்டு பஞ்சத்தில் இருக்கும் மக்களுகாக விரைவில் முடிவு எடுத்தால் பாதிகப்பட்ட குடும்பங்கள் ஏற்றம் பெறுவர். அம்மாவை எதிர் நோக்கி இருக்கிறோம் . நன்றி ராஜேந்திரன்
Rate this:
0 members
0 members
1 members
Cancel
manal sharqia - TelAviv,இஸ்ரேல்
26-டிச-201213:04:05 IST Report Abuse
manal sharqia இது ஒரு உலக மகா நுண்ணறிவு வித்தை,, இதை கத்துக்க நம்மூர் cmda அறிவாளிங்க குஜராத் போனாங்கலாக்கும்,, இதெல்லாம் ஒரு நியூஸா,, தேவையான இடத்த எடுத்துக்கிட்டு மிச்சத்த வீட்டு மனையா கொடுத்துடு வாங்கலாம்,, இப்போ பத்து சென்ட்டுல ஒரு வீடு ரோட்டுக்கு நடுவுல வந்தா, எட்டு செனட்ட நகர விரிவாக்கத்துக்கு எடுத்துக்கிட்டு மிச்ச ரெண்டு செனட்ட வீட்டு மனையா குஜராத்துல திருப்பி கொடுத்தாங்களாம்,, இப்ப இவங்களும் அதை பின்பற்றி நாட்ட முன்னேத்துராங்கலாம்.. இது ஒரு டெக்னிக்,, இது ஒரு புது நடை முறை,,.? ..
Rate this:
4 members
0 members
14 members
Cancel
thirumalai chari - chennai,இந்தியா
26-டிச-201207:29:34 IST Report Abuse
thirumalai chari காமெடி பண்ணாதையா. எந்த தவறு இந்தியால நிகழ்ந்தாலும் காந்தி குடும்பத்தை குறை சொல்வதும், எந்த நல்லது இருந்தாலும் குஜராத்தை காரணம் சொல்லுவதும், உனக்கு விதிக்கப்பட்ட பொழப்பா போச்சு. உன் திறமையை வேற எங்கேயாவது போய்(பொய்) விற்றுக்கோள். தமிழன் ஒன்றும் முட்டாளல்ல.
Rate this:
53 members
0 members
12 members
Hari Doss - Pollachi,இந்தியா
26-டிச-201215:46:42 IST Report Abuse
Hari Dossஉண்மை கசக்கத் தான் செய்யும் thirumalai chari, chennai....
Rate this:
3 members
1 members
5 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.