புதுடில்லி: ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை கடத்தி வந்த, ஜாம்பிய நாட்டுப் பெண்ணை, டில்லி சர்வதேச விமான நிலையத்தில், அதிகாரிகள் கைது செய்தனர்.நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று விமான நிலையத்தில், அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 32 வயது உடைய பெண், 41.5 கிலோ போதைப் பொருளை மறைத்து கொண்டு வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச அளவில் இதன் மதிப்பு 6.22 கோடி ரூபாய். அதிகாரிகள் விசாரணையில், அவர் பெயர் எமிலி சிலோங்கா சிபுயி, அழகுக்கலை நிபுணராக பணியாற்றும் இவர், அடீஸ் அபாபாவிலிருந்து, சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்ததும், இங்குள்ள தன் சகா ஒருவருக்கு, போதைப்பொருளைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.