மும்பை: பீகார் மக்களுக்கு எதிராக பேசிய, மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவை பாராட்டி, ரோஜா மலர் கொடுத்த போலீஸ்காரருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.பீகார் மாநிலத்தவருக்கு எதிராக, மும்பையில், மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே தலைமையில், ஆகஸ்ட் மாதம் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த போலீஸ்காரர் பிரமோத் தவேதி, ராஜ் தாக்கரே பேச்சை பாராட்டி, அவருக்கு, மேடையிலேயே ரோஜா மலரை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது.பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த விவகாரம் குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின், அவருக்கு எதிராக, ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். இதனைத் தொடர்ந்து, போலீஸ்காரர் பிரமோத் தவேதிக்கு, மூன்றாண்டுகளுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.