பெங்களூரு :""காவிரி நதி நீர் பிரச்னையை சட்டத்தின் மூலம் தீர்க்க முடியாது. கர்நாடக - தமிழக விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே தீர்க்க முடியும்,'' என, காவிரி நதி நீர் தொடர்பான வழக்கில், கர்நாடகா சார்பில் வாதாடி வரும், வக்கீல் நாரிமன் கூறினார்.
"காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும்' என, தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. அதனால், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, கர்நாடக அரசியல் தலைவர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பான வழக்குகளில், கர்நாடக அரசு சார்பில் ஆஜராகி வரும், வக்கீல் பாலி நாரிமன், தன் குடும்பத்தினருடன், மைசூரு வந்திருந்தார். அங்கு அவரை , கபினி விவசாயிகள் பாதுகாப்பு போராட்ட கமிட்டி தலைவர் குருபூர் சாந்த குமார் மற்றும் விவசாயிகள் சந்தித்தனர்.
அப்போது, சாந்த குமார் கூறியதாவது:காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, அரசிதழில் வெளியிடுவது தொடர்பாக, கர்நாடகம் மற்றும் தமிழகம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐந்து நீதிபதிகள் அடங்கிய, "பெஞ்ச்' முன், இந்த மனுக்கள் விசாரணைக்காக உள்ளன.ஆனாலும், தமிழகத்தின் வற்புறுத்தலுக்கு பணிந்து, இறுதி தீர்ப்பை அரசிதழிலில் வெளியிட, மத்திய அரசு முயற்சிக்கிறது. எனவே, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து, மத்திய அரசின் முயற்சிகளை தடுக்க வேண்டும்.இவ்வாறு சாந்தகுமார் கூறினார்.
இதுதொடர்பான மனு ஒன்றையும், நாரிமனிடம் அளித்தார். மனுவை பெற்று கொண்ட நாரிமன், "கர்நாடக விவசாயிகளின் பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பேன்' என, உறுதி அளித்தார்.
பின், நிருபர்களிடம் நாரிமன் கூறியதாவது:காவிரி நதி நீர் பிரச்னைக்கு, சட்டத்தின் மூலம் தீர்வு காண்பது, கால தாமதத்தை ஏற்படுத்தும். கர்நாடகா - தமிழகம் இடையேயான, காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னைக்கு, சமாதான பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண வேண்டும்.ஆனால், இரு மாநிலங்கள் இடையே, சமாதான பேச்சுவார்த்தை நடப்பதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. சட்டத்தின் மூலம் போராட்டத்தில் இறங்கினால், விவாதம் எளிதில் முடிவடையாது.இவ்வாறு நாரிமன் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வெற்றி தோல்வி என்பதல்ல பிரச்சினை..உரிமை மதிக்கப்பட வேண்டும்.. காற்று..நீர் ஆகியவை ஒருவருக்கே சொந்தமல்ல..ஒரே நாடு ஒரே இனம்..ஒரே மக்கள் என்கிற மரியாதை காப்பாற்றப்படவேண்டும்..விட்டுகொடுத்து இன துரோகியால்..இன்றைக்கு நாரிமன் போன்றவர்கள் இங்கே உள்ள துரோகியை போன்றே பேசுகின்றார். வியாபாரத்தை நினைத்து ஒட்டு மொத்த டெல்டா விவசாயிகளின் வயிற்றிலே நெருப்பு வைத்த பாவியால் இன்றைக்கு சுப்ரீம் கோர்ட்டின் உதவியை நாடவேண்டி உள்ளது..தங்களுக்கே முழு உரிமை என்று கொண்டாடுவது அறியாமையின் உச்சம். தீர்ப்புகள் கால தாமதம் ஆனாலும் வருங்கால சந்ததியினருக்கு அது எப்போதும் நிரந்தர தீர்வாய் அமையவே அம்மாவின் ஆற்றலும் முயற்சியும் தொடர்கின்றது. சிலையை வைத்து இரண்டுபக்கமும் நல்லவர் வேடம் தரித்த நயவஞ்சக எண்ணம் அம்மாவிடம் இல்லை..உரிமையை ஏன் விட்டுத்தர வேண்டும்? கட்டப்பஞ்சாயத்து எதற்கு? சட்டத்தின் ஆட்சி நடக்கிறது உண்மை என்பதால்..உரிமையோடு போராடுகின்றோம்..எதற்கு சமாதானம்...ஏமாற்றுவோரிடம்? நாரிமனுக்கு வழக்கு தோல்வி அடைந்துவிட்டால்..வருமானம் போகும்..அதற்காக கருணாவின் காதில் விழும்படி சொல்லுகின்றார்..இனி கேனா பானா அறிக்கையோடு வருவார்..நமக்கே உள்ள ஒரே எதிரி...இனத்தின் ஒட்டு மொத்த எதிரி..பார்ப்போமே..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.