சென்னை :"ஆந்திராவில், மத்திய அனல் மின்நிலைய உற்பத்தி முழுமையும், அம்மாநிலத்துக்கு வழங்குவதை போல், தமிழகத்தில் உள்ள மத்திய மின் உற்பத்தி முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் எழுதியுள்ள கடித விவரம்:தமிழகம், முன், எப்போதும் இல்லாத அளவிற்கு, கடும் மின் பற்றாக்குறையில் தவித்து வருகிறது. மின் தேவை, தற்போது, 12 ஆயிரம் மெகாவாட்டாக இருக்கும் போது, பல உற்பத்தி பிரிவுகளிலும் இருந்து, 8,000 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது; பற்றாக்குறை, 4,000 மெகாவாட்டாக உள்ளது.தமிழகத்திற்கு, கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற, எங்கள் கோரிக்கைக்கு, எதிர்மறையாக, மத்திய அரசு நடந்து கொள்வது ஏமாற்றத்தை அளிக்கிறது.கடந்தாண்டு, ஜூன், 6ம் தேதி, 1,000 மெ.வா., கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று கேட்டதற்கு, மிகக் குறைந்த அளவாக, 100 மெ.வா., மட்டுமே ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, இந்தாண்டு அக்., 23ம் தேதி ஒரு கடிதம் எழுதினேன்.
பாதக செயல்பாடு:
அக்கடிதத்தில், டில்லி அரசு திருப்பியளித்த, மத்திய மின் உற்பத்தி நிலைய மின்சாரத்தை, தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். மின் பரிமாற்ற விஷயத்தை காட்டி, தொடர்ந்து, மத்திய அரசு பாதகமாகவே செயல்பட்டு வருகிறது.எனவே, தமிழகத்தில் உள்ள மத்திய மின் உற்பத்தி நிலையங்களான, நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம், கல்பாக்கம் அணுமின் நிலையம், மற்றும் சமீபத்தில் உற்பத்தி துவக்கப்பட்ட, வல்லூர் அனல் மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும், 2,830 மெ.வா., மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.தமிழகத்திற்குள், மின் பரிமாற்ற கட்டுப்பாடுகள் இல்லை. எனவே, புதிய மின் திட்டங்களில், முழுமையான மின் உற்பத்தி துவக்கப்படும் வரை, தமிழக மக்கள் எதிர்கொள்ளும், கடுமையான மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், இடைக்கால ஏற்பாடாக, இதை வழங்க வேண்டும்.கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க, தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, தங்களுக்கு தெரியும்.
2,000 மெகாவாட்:
எனவே, கூடங்குளம் திட்டத்தில், முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் போது, அங்கிருந்து கிடைக்கும், 2,000 மெகவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன். ஆந்திராவில், தேசிய அனல் மின் கழகத்தால், சிம்ஹாத்ரியில் நிறுவப்பட்டுள்ள, மத்திய மின் உற்பத்தி நிலையத்தில், உற்பத்தி செய்யப்படும், 1,000 மெகவாட் மின்சாரம் முழுமையும், அம்மாநிலத்திற்கே வழங்கப்படுகிறது.எனவே, மத்திய அரசு அதே அளவுகோலில், கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுமையையும், மின் பற்றாக்குறையில் தவித்து வரும் தமிழகத்திற்கு, வழங்கவேண்டும்.மேலும், இடைக்கால நிவாரணமாக, தமிழகத்தில் உள்ள மத்திய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மின்சாரம் இல்லை..... அதற்கு.,முந்தைய அரசான திமுக வும், மத்திய அரசும்தான் காரணம் ... டெங்கு காய்ச்சல்.... அது முந்தைய திமுக அரசின் அஜாக்கிரதையே காரணம்... சென்னையில் எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள்... அதற்கு நிச்சயமாக நாங்கள் பொறுப்பல்ல.. திமுகவினர் ஆட்சி செய்தபோது, அதை ஒழுங்காக அகற்றி இருந்தால், இன்று இப்படியொரு நிலைமை ஏற்ப்பட்டிருக்காது.... விவசாயிகள் தற்கொலை முயற்சி... அது கருணாநிதியின் தூண்டுதலில் பேரிலேயே நடக்கிறது..... காற்றில்லாமல் காற்றாலைகள் இயங்கவில்லை.... அது கருணாவின் திட்டமிட்ட சதி... அதனால்தான் ஆட்சியை உங்களிடம் ஒப்படைத்தோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்...? என் தலைமையிலான அதிமுக அரசு, தினம் கோடி ரூபாய்களுக்கான திட்டங்களை அறிவிக்கிறோம்... எதிர் கட்சிகளை பயமுறுத்துகிறோம். வழக்கு போடுகிறோம்.. மேலும் எதிர் கட்சி MLA க்களை இழுக்க ராப்பகலாக பாடுபடுகிறோம்... எனது தலைமையிலான அதிமுக அரசு,மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, மக்களுக்காகவே பாடுபடும் அரசு... ஆகவே வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் எங்களுக்கு நாற்பதுக்கு நாற்பதும் வழங்கி சந்தொஷப்படுத்துவார்கள்????

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.