Sasikala's claim in court unadulterated lie: Karunanidhi | ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவை தூண்டிவிடவில்லை: கருணாநிதி கூறுகிறார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவை தூண்டிவிடவில்லை: கருணாநிதி கூறுகிறார்

Updated : டிச 26, 2012 | Added : டிச 25, 2012 | கருத்துகள் (107)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவை தூண்டிவிடவில்லை: கருணாநிதி கூறுகிறார்,Sasikala's claim in court unadulterated lie: Karunanidhi

சென்னை "ஜெயலலிதாவுக்கு, எதிராக, என்னை கருணாநிதி தூண்டிவிட்டார் என, பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா கூறியுள்ளது, அப்பட்டமான பொய்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜெயலலிதாவுக்கு எதிராக, பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வரும், சொத்துக் குவிப்பு வழங்கில், நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு, பதில் அளித்த சசிகலா, "ஜெயலலிதாவுக்கு, எதிராக, கருணாநிதி என்னை தூண்டிவிட்டார்' என, கூறியுள்ளது கலப்படமற்ற, அப்பட்டமான பொய். சசிகலா கூறுவதற்கு, எவ்வித ஆதாரமும் இல்லை. நீதிமன்றத்திலேயே, தவறான, தகவலை அவர் கூறியுள்ளார். சுதாகரன் திருமணத்தை ஜெயலலிதா நடத்தவில்லை; பெண் வீட்டார் தான் செலவழித்து நடத்தினர் என, சசிகலா சொல்லியிருப்பது, எந்தளவுக்கு பொய்யான தகவலோ, அதுபோல தான், என் மீது, சொல்லியிருக்கும் குற்றச்சாட்டும்.

தமிழக மீனவர்கள் மீது, இலங்கை ராணுவத்தின் தாக்குதல் தொடர்கதையாக இருக்கிறது. இதற்கு, முற்றுப்புள்ளி வைக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.டெல்டா விவசாயிகள், 9 பேர் தற்கொலை செய்து கொண்டதாக, அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாண்டியன், முதல்வரிடம் கூறியுள்ளார். ஆனால், 2 பேர்தான் தற்கொலை செய்து கொண்டதாக அர” கூறுகிறது. இதில், எது உண்மை என, தெரியவில்லை.பத்தாம் வகுப்பு மாணவர்களின், விவரங்களை ஜன. 4ம் தேதிக்குள், ஆன்-லைனில் பதிவு செய்யவேண்டும் என்ற காலக்கெடுவை, அரசு உடனடியாக நீட்டிக்க வேண்டும். கடும் மின்வெட்டால், கிராமப்புற மாணவர்களின் விவரங்களை பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheenu Meenu - cheenai,இந்தியா
27-டிச-201200:05:45 IST Report Abuse
Cheenu Meenu இதிலிருந்து என்ன தெரிகிறது? சசிகலா ஜெயலலிதா தோழியாக இருந்தாலும் கருணாநிதியுடனும் லிங்க் இருந்தது என்பது வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது. எனவே இரண்டு கழகமும் சேர்ந்து நாட்டை கூறு போட்டுகொண்டு இருக்கின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஒரே குட்டையில் ஊறிக்கொண்டு இருக்கும் மட்டைகள் - காமராஜர்
Rate this:
Share this comment
Cancel
pinkthamizhan - Budapest,ஹங்கேரி
26-டிச-201214:50:17 IST Report Abuse
pinkthamizhan இவள் சின்ன புள்ள...வாயில விரல் வச்சால் கூட கடிக்க தெரியாதாக்கும்?
Rate this:
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
26-டிச-201214:20:04 IST Report Abuse
Kankatharan  ஆதாரம் இல்லாமல் தட்டிவிடுவதுதானே உங்க பிறவிக்குணம். உங்களைத்தவிர மற்றெல்லாரும் சொல்லுவது அப்பட்டமான பொய்தான். சூனியம் செய்வதற்கென்றே பிறப்பெடுத்த உங்களை வெல்லுவதற்கு இனி யாராவது பிறப்பெடுத்தால்த்தான்.
Rate this:
Share this comment
Cancel
Pa. Saravanan - Kovai,இந்தியா
26-டிச-201214:10:24 IST Report Abuse
Pa. Saravanan அஞ்சு ரூவாய வாங்கிட்டு ஐநூறு ரூவாயிக்குக் கூவுறாரே மரியா. யப்பா அடுத்த தேர்தல்ல இவுருக்கு எதுனாச்சும் தெருவோர மேடைல கத்துற பதவியாவது குடுங்கோ. இந்த சால்ரா சத்தத்தக் கேட்டுட்டு எதிரிக் கச்சிக்காருங்கோ எல்லாரும் ஓடீரணும் ஆமா. அப்போவாவுது அய்யா செயிப்பாரான்னு பாப்போம்.
Rate this:
Share this comment
Cancel
kadayanallur Abu haani - JEDDAH,சவுதி அரேபியா
26-டிச-201213:46:12 IST Report Abuse
kadayanallur Abu haani முழங்காலுக்கும் உச்சந்தலைக்கும் முடிச்சு போட முடியுமா ? முடியும் இந்த மாதிரி கண்ணை மூடிக்கொண்டு கருத்து சொல்லும் அல்லக்கைகள் இருக்கும் வரை. சசி ஜெயாவுடன் பழகியதில் இருந்து அங்கே தான் இருக்கிறார். இவ்வளவு நாள் வராத இந்த (பொய் )குற்றச்சாட்டு இப்பொழுது மட்டும் எப்படி சசி என்ன சின்ன பாப்பாவா மெஜாரிட்டி பலமிக்க ஒரு அரசுக்கு நெருக்கமானவர் ஆகவே சசியின் கூற்று தவறானதே
Rate this:
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
26-டிச-201213:20:45 IST Report Abuse
Bava Husain ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கின்ற நீங்களெல்லாம் உண்மையாகவே ரொம்ப,ரொம்ப நல்லவர்கள்.....மக்களாகிய நாங்கள்தான், பாவிகள்,பாவிகள்,பாவிகள்
Rate this:
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
26-டிச-201213:11:18 IST Report Abuse
Bava Husain கேட்பவன் கேனையனாக இருந்தால்..............
Rate this:
Share this comment
Cancel
RAJESHKANNA - riyadh,சவுதி அரேபியா
26-டிச-201212:54:25 IST Report Abuse
RAJESHKANNA நேற்றைய மாலை நேரத்தில் ஒரு தேனீர் கடையில் நின்று கொண்டிருந்தபோது சுமார் 60 வயது மதிக்கதக்க மூவர் மிக காட்டமாக அரசியல் பேசி கொண்டிருந்தார்கள். என்னதான் பேசுகிறார்கள் என்று என் செவியையும் கொஞ்சம் அதன் பக்கம் திருப்பினேன்.. அவர்கள் பேசின வார்த்தைகளிலிருந்து கலைஞர் மேலும் , கழகத்தின் மேலும் மிகவும் பற்றுடையவர்கள் என்று தெரிந்தது. ஆனாலும் அவர்களின் பேச்சு திமுகவை பாராட்டி மற்றும் அல்ல, பல விமர்சனங்களை வைத்தும் நடந்துகொண்டிருந்தது. ஈழம், பஸ், பால் விலை, கரண்டு பில் உயர்வு, கரண்ட் கட் , காங்கிரசு கூட்டணி டெல்லி மாணவி கற்பழிப்பு, ஸ்ரீவைகுண்டம் புனிதா கொலை வரை இப்படி பல விவாதங்கள். அவர்களின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டு, கலைஞர் தொழிற்சாலைகளை நிறுவி பல வேலைவாய்ப்புகளை உருவாக்கினார், தரமான ரோடு வசதி, அவர் ஆட்சியில் இருந்தவரை எந்த ஒரு விலையேற்றமும் இல்லாதது. பல நல்ல ப்ராஜெக்டுகள் கொண்டுவந்தும் அவருக்கு கெட்ட பெயர். ஏன் என்பதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம் கட்சியையும் மீறி ஒரு நடுநிலையாளனாய் சரி என்று தோன்றியது.. காரணம் என்னவெனில், கலைஞர் தான் ஆட்சியில் இருக்கும்போது அவருக்குஎதிராக போராட்டம் நடந்தால், நடக்கவிட்டு, அனைவருக்கும் தெரிந்த பின் கைது செய்வார் சட்டத்தை மீறி இருந்தால்.. அதே போல் அவர் மேல் வைக்கும் விமர்சனத்தை தடுக்காமல் அனைவரையும் பேச விடுவார்..அதனால் அவர் ஆட்சியில் நடந்ததாக சொல்லப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் மக்களை அடையும்.. ஆனால் அம்மா ஆட்சியில் எதையும் பேசமுடியாது, பேசுவதற்க்கு முன்னோ, போராட்டம் நடத்த முற்ப்பட்டாளோ முதலிலேயே அடக்கி விடுவார்கள்..யாரும் அம்மாவை எதிர்த்து பேச முடியாது..அதனால் ஜெயாவின் குறைகள் மக்களை சென்றடைவதில்லை..இங்குதான் அவர் வெற்றி பெறுகிறார்..கலைஞர் ஜனநாயக வாதியாக இருத்தலைவிட ஜெயாவை போல் சர்வதிகாரியாக இருத்தலே நன்று...அப்படி இல்லாவிடில் கலைஞர் மீதான் அனைத்து குற்ற சாட்டுகளும் மக்களை சென்றடையும்..அது திமுகவின் வீழ்ச்சியே என்று முடித்தனர்.. அடப்பாவிகளா, ஜனநாயக வாதியா இருப்பது ஒரு குற்றமா?? மக்களும் இதை புரிந்துகொள்ளவில்லை :-( ஆனாலும் அவர்களின் இந்த வாதம் சரியெனப்பட்டது..
Rate this:
Share this comment
Cancel
JOHN SELVARAJ - CHENNAI ,இந்தியா
26-டிச-201212:45:44 IST Report Abuse
JOHN SELVARAJ நூறுக்கு மேற்பட்ட வாய்தாக்கள் வாங்கியாகி விட்டது, நீதிபதியை மாற்ற சொல்லியாகி விட்டது, இதுவரை பதினைந்து ஆண்டுகளாக கொடுத்த எல்லா வாக்கு மூலங்களும் செல்லாது என சொல்லியாகி விட்டது, சுப்ரீம் கோர்ட் வரை சென்று வந்தாகி விட்டது, ஆனாலும் விசாரணையை நிறுத்த முடியவில்லை. ஆனால் இழுத்தடிக்க முடியும் என்பதை நிருபித்து வருகிறார்கள். அதில்தான் இறுதியில் ஜெயலலிதாவுக்கு எதிராக, என்னை கருணாநிதி தூண்டிவிட்டார் என்ற புதுக் கரடியை சசிகலா விட்டுள்ளார். நீதியை இழுத்தடிக்கலாம், ஒருநாள் நிச்சயம் வென்றே தீரும் என்பது தான் நியதி.
Rate this:
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
26-டிச-201212:37:34 IST Report Abuse
Mohamed Nawaz இந்த வழக்கினை வண்டு முருகனால் மட்டுமே வாதாட முடியும், வாதியும்-பிரதிவாதியும் அவ்வளவு சுத்தமானவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை