பதிவு செய்த நாள் :
கருத்துகள் (46)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளை தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும், பெரும் குளறுபடி நடந்திருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.உடல்தகுதி நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வாகி உள்ளனர். மேலும், சரியான கல்வித்தகுதி இல்லாதவர்களும், இறுதி பட்டியலில் தேர்வாகி உள்ளனர். இவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கும் பணிகள் நடந்து வருவதால், ஓரிரு நாளில், புதிய தேர்வுப் பட்டியல் வெளியாக உள்ளது.

நெருக்கடி:
அதிகார வட்டாரத்தில் இருந்து வந்த, நெருக்கடி காரணமாக, டி.இ.டி., ஆசிரியர் தேர்வுப் பணி, இடியாப்ப சிக்கலாக மாறி, டி.ஆர்.பி., தவியாய் தவித்து வருகிறது. பணி நியமனத்திற்கு முன், சான்றிதழ்களை சரியாக சரிபார்க்காமல் கோட்டை விட்டுவிட்டு, 18 ஆயிரம் பேருக்கு, பணி நியமனம் வழங்கியாகி விட்டது. உத்தரவுகளை பெற்றோர், பணியிலும் சேர்ந்துவிட்டனர்.ஆனால், இப்போது, மீண்டும் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி, சத்தமில்லாமல், டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது. பணியில் சேர்ந்து, சம்பளமும் வாங்கிய பின், அவர்களை பணி நீக்கம் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.அப்படி பணி நீக்கம் செய்தால், அரசுத் தரப்பின் மெத்தனப்போக்கு, வெட்ட வெளிச்சத்திற்கு வருவதுடன், பாதிக்கப்படுபவர்கள், கோர்ட் படியேறும் நிலை உருவாகலாம்.

அம்பலம்:
இதுபோன்ற நிலையில், முதுகலை ஆசிரியர் தேர்விலும், குளறுபடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா, 13ம் தேதி, சென்னையில் நடந்தது.அதிகமான ஆசிரியர்களுக்கு, உத்தரவு வழங்குவதை காட்டுவதற்காக, கடைசி நேரத்தில், திடீரென, 2,308 முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியலும் வெளியிடப்பட்டது.மொத்தம், 2,895 பேரை தேர்வு செய்ய, தேர்வு நடத்தியபோதும், வழக்கு காரணங்களால், 587 பணியிடங்களை, "ரிசர்வ்' செய்துவிட்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டும், தகுதியானவர்கள் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது.முதல்வர் விழாவில், 2,308 பேருக்கும், தேர்வுக்கான உத்தரவு மட்டுமே வழங்கப்பட்டது. இன்னும், அவர்களுக்கு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கவில்லை. டி.ஆர்.பி.,யில் இருந்து, 2,308 பேர் சம்பந்தமான கோப்புகளை, பள்ளி கல்வித்துறையிடம் ஒப்படைத்து, டி.ஆர்.பி., தலைவர், "தேர்வுக் கடிதம்' வழங்கிய பின், அவர்களை பணி நியமனம் செய்வதற்கான பணியை, கல்வித்துறை செய்யும்.

சரிபார்ப்பு:
இதுவரை, டி.ஆர்.பி.,யில் இருந்து, கல்வித்துறையிடம், கோப்புகள் ஒப்படைக்கவில்லை. தேர்வு பெற்றவர்கள்

அனைவரும், தகுதியானவர்கள் தானா என்பதை, மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணியில், டி.ஆர்.பி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது.இதற்கிடையே, தகுதியில்லாதவர்கள் பலர் தேர்வு பெற்றுள்ள தகவலை, டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, பல தேர்வர்கள் கொண்டுசென்றனர். புகார்களை அலட்சியப்படுத்தாமல், கவனமுடன் ஆய்வு செய்த, டி.ஆர்.பி., தகுதியற்றவர்கள் பலர், தேர்வாகி இருப்பதை கண்டுபிடித்துள்ளது.
* உடல்திறன் நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வு பெற்றுள்ளனர். ஊனமுற்றோர் பிரிவில், "கட்-ஆப்' மதிப்பெண்கள் குறைவு என்பதால், இந்தப் பிரிவில், பலர் தேர்வாகி உள்ளனர்.இவர்களுடைய தேர்வு, உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் மட்டும், 20க்கும் மேற்பட்டோர், நீக்கப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.
* சரியான கல்வித்தகுதி இல்லாதவர்களும், இறுதி தேர்வுப் பட்டியலில், தேர்வாகி உள்ளனர். எம்.எஸ்சி., ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி படிப்பிற்கு நிகரானது கிடையாது. ஆனால், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்தவர்களும், தேர்வாகி உள்ளனர்.
* ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்த ஒருவர், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில் தேர்வாகியும், சரியான கல்வித்தகுதி இல்லை என கூறி, அவரது தேர்வை, டி.ஆர்.பி., நிராகரித்துள்ளது. ஆனால், அதே தேர்வர், முதுகலை ஆசிரியர் தேர்வில், தேர்வாகி உள்ளார். இது எப்படி சாத்தியம் என, தேர்வர்கள் கொதிக்கின்றனர்.
* "கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்' படித்தவர்கள், ரெகுலர், "ஆங்கிலம்' பாடத்திற்கு நிகரானவர்கள் கிடையாது. ஆனால், "கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்' படித்தவர்கள் பலர், தேர்வு பெற்றுள்ளனர்.
இதுபோன்ற தகுதியற்றவர்களை கண்டுபிடித்து, அவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கும் பணியில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்படலாம் என, கூறப்படுகிறது. தகுதியற்றவர்கள் நீக்கத்தால்,

Advertisement

அடுத்த, "ரேங்க்'கில் உள்ளவர்களை தேர்வு செய்து, அவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டிய கட்டாயத்தில், டி.ஆர்.பி.,உள்ளது. எனவே, ஓரிரு நாளில், புதிய தேர்வுப் பட்டியலை எதிர்பார்க்கலாம்.
"கட்-ஆப்' மதிப்பெண் வெளியிட தயக்கம் ஏன்? டி.இ.டி., மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில், இன சுழற்சி வாரியாக, "கட்-ஆப்' மதிப்பெண்கள் விவரங்களை, இதுவரை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை.அதேபோல், இணையதளத்தில், தனிப்பட்ட தேர்வர், தங்களுடைய தேர்வை தெரிந்துகொள்வதற்கு ஏற்ப மட்டுமே, தகவல் தரப்படுகிறது. பாட வாரியாக தேர்வு பெற்ற அனைவரின் தகவல்களையும், ஒரே பட்டியலில் வெளியிடுவது இல்லை.இதுபோன்று பட்டியல் வெளியிட்டால், தகுதியானவர்கள் மட்டும் தான் தேர்வாகி இருக்கிறார்களா என்பதை, அனைவருமே தெரிந்து கொள்ள முடியும். தற்போது, அதற்கு வழியில்லாமல் உள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்வு பெற்றவர்களின் பெயர் விவரங்களையும், அவர்கள், பிரிவு வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரங்களையும், அனைத்து தேர்வர்கள் பார்வைக்கு, டி.ஆர்.பி., வெளியிட வேண்டும்.இப்படி எதையுமே செய்யாமல், "வெளிப்படையாக தேர்வுப் பணிகள் நடக்கிறது' என, டி.ஆர்.பி., திரும்ப திரும்ப கூறி வருவது, தேர்வர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.
- நமது நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (46)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Diviya Rathi - jeddah,சவுதி அரேபியா
26-டிச-201212:22:49 IST Report Abuse
Diviya Rathi கூத்தாடிகளின் கைகளில் அதிகாரம் கொடுத்தால் இந்த மாதிரி பல கூத்து நடக்கத்தான் செய்யும் ....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-டிச-201200:27:23 IST Report Abuse
தமிழ்வேல் இதுகள் நூடுல்ஸ், இடியாப்பம் செய்யத்தான் லாயக்கு...அதிலேதான் எவ்வளவு குளறுபடி செய்தாலும் தெரியாது......
Rate this:
Share this comment
Cancel
saraathi - singapore,சிங்கப்பூர்
26-டிச-201211:56:10 IST Report Abuse
saraathi பிறப்பு சான்றிதல் முதல் இறப்பு சான்றிதல் வரை எல்லாவற்றிற்கும் கல்லா கட்டி பழக்கப்பட்டவர்கள் நம்மவர்கள். இந்த ஆசிரியர் நியமனத்தை வைத்து பல மன கோட்டைகள் கட்டிவந்தவர்களுக்கு அரசின் நேர்மையான செயல்பாடுகள் ஒரு பேரிடி தான். அந்த எரிச்சல் ஒருபுறம்,அத்தகையவர்களால் நேர்மையானவர்களுக்கு தரப்படும் ஒத்துழையாமை மற்றும் அவமதிப்புகள் ஒருபுறம் என சிக்கல்கள் இருப்பது உண்மைதான்.பெயரை காப்பாற்றிக்கொள்ள கேள்வித்தாள் வெளியானதுமுதல் தற்போதைய சான்றிதல் சரிபார்ப்புவரை ஏற்ப்பட்ட தவறுகளை மறைத்து லஞ்சம் வாங்கிகொண்டு அமைதியாக முறைகேடு செய்திருந்தால் எல்லாம் நல்லபடியாக நடந்ததாகவே தெரிந்திருக்கும்.இம்முறை அப்படி இல்லை என்பதே பலரது புலம்பல்களுக்கு காரணம்.எத்தகைய நல்ல முயற்சிகளின்போதும் சில தவறுகள் நடைபெறுவது சகஜமே.முறைகேடுகள் நடந்து அதனால் நடக்க இருக்கும் தவறுகளைவிட நல்ல முயற்சியில் ஏற்ப்படும் தவறுகளை சகித்துகொள்ளலாம்.இதில் முதல்வரின் விழாவை முன்னிட்டு அவசரம் காட்டியது மட்டுமே ஒப்புக்கொள்ளமுடியாத தவறு. தவறான வழியில் பிரதமராகவே தேர்ந்தெடுக்கப்படாலும் அவரின் முறைகேடுகள் தெரிய வந்து அவர் பதவி நீங்கி தான் ஆக வேண்டும் என தீர்ப்பு வந்தால் அவரை நீக்குவதுதான் முறை.இப்போதைய சூழ்நிலையில் தவறுகள் நடைபெறுவது கூட குற்றமல்ல அவை தவறு என தெரிந்திருந்தும் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படாததுதான் பெரும் குற்றம்.அத்தகைய நிலை வராது தவறுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முனுமுனுக்காது ஆதரிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Deen - Doha,கத்தார்
26-டிச-201211:53:54 IST Report Abuse
Deen படிப்பு சான்றிதள்களை சரிபார்க்க தெரியாத இந்த டி.ஆர்.பி அலுவலர்களை தகுதி நீக்கம் செய்யுங்கள், ஒரு டிகிரி படிச்சு முடிச்சவன் வேலை தேடி, வேலை கேட்டு தான் வருவான், நீ உனக்கு தேவையான படிப்பை உடைய ஆசிரியர்களை தேர்ந்து எடுக்காம படித்தவர்களை ( தேர்வர்களை ) குறை சொல்லுவது தவறு, படிக்காம போலி சான்றிதள்கள் கொடுக்க பட்டு இருந்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசுக்கு தகுதி உண்டு. எம்.எஸ்சி., ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி படிப்பிற்கு நிகரானது கிடையாது. ஆனால், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்தவர்களும், தேர்வாகி உள்ளனர். "கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்' படித்தவர்கள், ரெகுலர், "ஆங்கிலம்' பாடத்திற்கு நிகரானவர்கள் கிடையாது. ஆனால், "கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்' படித்தவர்கள் பலர், தேர்வு பெற்றுள்ளனர். இந்த வரிகள் என்ன சொல்லுதுனா , சரிபார்க்கும் பணியில் உள்ள அதிகாரிகளை தகுதி உள்ளவர்களாக ஆக்கி விட்டு, அதற்கு அப்புறம் தேர்வர்களின் தகுதியை சரிபாருங்கள் அப்படின்னு இந்த உண்மையின் உரைகல் உரைக்குது....
Rate this:
Share this comment
Cancel
Raghul Rajan - Vadalur,இந்தியா
26-டிச-201211:45:04 IST Report Abuse
Raghul Rajan "எம்.எஸ்சி., ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி படிப்பிற்கு நிகரானது கிடையாது". நான் biology மாணவன், எனக்கு இது மிக கொடுமையாக தெரிகிறது. இது எப்படி என்றால் லட்டு வேறு பூந்தி வேறு என்பது போலாகும். "அறிவு ஜீவி" தினமலரே இப்படி என்றால் மற்ற பத்திரிகைகைளை கேட்க வேண்டாம். இன்று ஒவ்வொரு துறையும் பல்வேறு பிரிவுகளாகவே பெரும்பாலும் Postgraduateஇல் வழங்கபடுகிறது. இவ்விடத்தில் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்தவர்கள் கெமிஸ்ட்ரி வகுப்பு எடுக்க முடியும். பிறகு ஏன் அரசு கெமிஸ்ட்ரி ஒன்றை மட்டுமே அளிக்காமல் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி,இன்-ஆர்கானிக் கெமிஸ்ட்ரி என்று படிப்பை அனுமதிக்க வேண்டும்? ஆர்கானிக் கெமிஸ்ட்ரி,இன்-ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்தவர்கள் சும்மா இருப்பதா ? பொய் சான்றிதழகள் கொடுத்தவர்கள், பொய் தகுதி கொடுத்தவர்களை நீக்குவதில் தவறில்லை. அல்லது கெமிஸ்ட்ரி,ஆர்கானிக் கெமிஸ்ட்ரி,இன்-ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்தவர்கள் எண்ணிக்கைக்கேற்ப "quota " உருவாக்குவது ஒரு நல்ல தீர்வு. இதில் பெரும்பாலான சதவிகிதம் கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு ஒதுக்கலாம் "எம்.எஸ்சி., ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி படிப்பிற்கு நிகரானது கிடையாது" என்று செய்தி போடுவது, மக்கள் அதை நம்புவது, சமுதாயத்தின் மாபெரும் அறியாமையை உணர்த்துகிறது. கல்வி அறிவு மக்களிடையே சரியாக போய் சேரவில்லை என்பது நன்றாக புரிகிறது
Rate this:
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
26-டிச-201211:30:39 IST Report Abuse
Mustafa இணையதளத்தில், தனிப்பட்ட தேர்வர், தங்களுடைய தேர்வை தெரிந்துகொள்வதற்கு ஏற்ப மட்டுமே, தகவல் தரப்படுகிறது. பாட வாரியாக தேர்வு பெற்ற அனைவரின் தகவல்களையும், ஒரே பட்டியலில் வெளியிடுவது இல்லை. இதுபோன்று பட்டியல் வெளியிட்டால், தகுதியானவர்கள் மட்டும் தான் தேர்வாகி இருக்கிறார்களா என்பதை, அனைவருமே தெரிந்து கொள்ள முடியும். இது செய்தி எனது கோரிக்கை யாருக்கு எவ்வளவு பணம் கை மாறியது என்ற விவரமும் சேர்த்து வெளியிட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Dhanabal - Thoothukudi,இந்தியா
26-டிச-201211:28:56 IST Report Abuse
Dhanabal அரசு நிர்வாகத்தில் நேர்மையும், வெளிப்படையான நிர்வாகமும் இருந்தால் இது போன்ற தவறுகள் நிச்சயம் நிகழ வாய்ப்பு இல்லை ....
Rate this:
Share this comment
Cancel
karthik - Erode,இந்தியா
26-டிச-201210:52:10 IST Report Abuse
karthik தவறு செய்ய மிக சரியான வாய்ப்பை அளித்து விட்டு பிறகு ஊர் அறிய, நாடு அறிய தண்டனை தருவதே இந்த அரசுக்கு வாடிக்கை ஆகி விட்டது. கண்டிப்புடன் அரசாங்கத்தை நடத்துவதால் மட்டுமே ஒரு மாநிலம் வளர்ந்து விட முடியாது. ஆளுங்கட்சியின் மீது மக்கள் மேலும் மேலும் அதிருப்தி அடையவதற்கு இந்த மாதிரியான ஊழல், குளறுபடிகள், பொறுப்பற்ற அதிகாரிகளின் மெத்தனப்போக்குகளே காரணமாக அமைந்து விடுகிறது.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-டிச-201200:18:06 IST Report Abuse
தமிழ்வேல் // ஊர் அறிய, நாடு அறிய தண்டனை தருவதே இந்த அரசுக்கு வாடிக்கை ஆகி விட்டது. // ஊர் அறிய, நாடு குட்டுகள் கோர்ட் மூலம் பெறுவதே இந்த அரசுக்கு வாடிக்கை ஆகி விட்டது....
Rate this:
Share this comment
Cancel
sathiya - cuddalore,இந்தியா
26-டிச-201210:23:56 IST Report Abuse
sathiya ஏற்கனவே ஒரு பதவிக்கு இருவர் சான்றிதழ் சரி பார்த்து இருக்கும் பொழுது ஏன் மீண்டும் சன்றிதழ் சரி பார்க்க வேண்டும். அதில் இருந்து எடுத்து வேலை அளித்து லிஸ்ட் தயார் செய்து விட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
jeans bala - CHENNAI,இந்தியா
26-டிச-201210:20:47 IST Report Abuse
jeans bala tet எக்ஸாம் IAS எக்ஸாம் போல கண்துடைப்பு அரங்கேறி விட்டது. ஏன் இந்த தலைவலி. பேசாம போன ஆட்சியில் நடந்தது போல SENIORITY வேலை வாய்ப்பு மூலம் ஆட்களை தேர்வு செய்யாமல் பணத்திற்கும், பப்ளிசிட்டிக்கும் செய்தால் இப்படித்தான் இருக்கும் இனிமேலாவது திருந்டுவர்களா?
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
27-டிச-201204:56:32 IST Report Abuse
மதுரை விருமாண்டிநான் உத்தமி... காசு கொடுத்தா ... ஒரு நாளைக்கு மட்டும்......
Rate this:
Share this comment
Cancel
unmai19 - bengaluru,இந்தியா
26-டிச-201210:08:07 IST Report Abuse
unmai19 மே மாசம் தேர்வு எழுதிய (p .g ) எங்களுக்கு இன்னும் இறுதி பட்டியலே வரவில்லை. ஆனால் அக்டோபர் மாதம் தேர்வு எழுதியவர்களுக்கு இறுதி பட்டியலும் வந்து, பனி நியமனமும் பெற்று வேலையிலும் சேர்ந்து விட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் அக்டோபர் மாதம் தேர்வு எழுதியவர்கள் எல்லாம் எங்களை பார்த்து ஏளனமாக சிரிகெகிறார்கள். நாங்கள் என்ன பாவம் செய்தோம் இன்று எத்தனை மாணவர்கள் வேலைக்கு செல்லாமல் இதையே எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா ? அம்மா அவர்கள் எங்கள் மீது கருணை வைத்து இதற்க்கு ஒரு நல்ல தீர்வு கொடுக்கும்படி கேட்டுகொள்கிறோம் , நன்றி தினமலர்
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-டிச-201200:14:55 IST Report Abuse
தமிழ்வேல் கடைசி வரிதான் கொஞ்சம் இடிக்குது... ஏமாற்றி அரசியல் வாதிகளிடம் காசுகொடுத்து வேலை பெற்றவர்கள் கோர்டுக்கு செல்வது சிரமம் என பலரின் கருத்துக்களின் படி தெரிகின்றது....நீங்கள் அம்மாவை மட்டும் நம்பி இருப்பதைவிட இந்த சமயத்தில் கோர்ட்டை நாடினால் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என தோன்றுகின்றது.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.