சபரிமலை: சபரிமலையில் நேற்று, தங்க அங்கி அணிவித்து, தீபாராதனை நடந்தது. மண்டல பூஜைக்காக, சபரிமலையில் திரண்ட பக்தர்கள், நடுக்காட்டில் தவிக்கின்றனர்.
ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி, நேற்று பகல் ஒரு மணிக்கு பம்பை வந்தது. பக்தர்கள் மற்றும் தேவசம்போர்டு வரவேற்புக்கு பின்னர் மாலை 3:30 மணிக்கு, பேடகத்தில் அங்கி வைக்கப்பட்டு, அய்யப்ப சேவா சங்கத்தினர் தலைச்சுமையாக எடுத்து வந்தனர். 5:40 மணிக்கு, சரங்குத்திக்கு வந்த அங்கிக்கு, தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. 6:15 மணிக்கு, 18 படி வழியாக வந்த அங்கியை, தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி தாமோதரன் போற்றி ஆகியோர் வாங்கி, நடை அடைத்து, அங்கியை அணிவித்தனர்.
தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடந்தது. இதில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவக்குமார், தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன் நாயர், சபரிமலை திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், பி.ஆர்.ஓ., முரளிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம்: மகரவிளக்கு நாளை மிஞ்சும் அளவு, பக்தர்கள் கூட்டம், கடந்த மூன்று நாட்களாக, சபரிமலையில் அலைமோதுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இன்று காலை 11:00 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும் என்பதால், காட்டில் பரிதவிக்கும் பக்தர்கள், மலையேறி வந்து, படியேறி அபிஷேகம் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.