மங்கலம்பேட்டை: நூறு நாள் வேலை திட்டத்தில் விவசாயம் பாதிக்கிறது என்பது தவறானது என அழகிரி எம்.பி., பேசினார். மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி கிராமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட பொருளாளர் செந்தில்ராஜா தலைமை தாங்கினார். வட்டார தலைவர் ராமராஜன், ஊராட்சி தலைவர் வேல்முருகன், மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். தெற்கு வட்டார தலைவர் ராஜிவ்காந்தி, புலியூர் ஊராட்சி தலைவர் ராஜவேலு, பட்டி ஊராட்சி தலைவர் சேகர், கந்தசாமி பங்கேற்றனர்.
விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கி, அழகிரி எம்.பி., பேசியதாவது: மாவட்டத்தில் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் 15 நாட்களுக்குள் ஆவணங்களை அளித்தால், அதனை சரிபார்த்து எம்.பி., நிதியிலிருந்து மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும். சோனியாகாந்தி அறிமுகப்படுத்திய மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டம் ஏழை மக்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டம். மாவட்டத்தில் 100 நாள் வேலை செய்வோருக்கென தனி சங்கம் துவக்கப்பட உள்ளது. அனைவரும் இதில் சேர வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் விவசாயம் பாதிக்கிறது என்பது தவறானது. நானும் ஒரு விவசாயி. அமெரிக்கவில் வெறும் 5 பேர், 10 ஆயிரம் ஏக்கரை பயிர் செய்கின்றனர். வரும் காலங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்வோர், ஒருவரின் நிலத்தில் நடவு செய்தால் ஊதியத்தில் 15 சதவீதத்தை விவசாயி மானியமாக தர வேண்டும். இந்தமுறை கேரளா போன்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு எம்.பி., பேசினார். பின்னர் ஆலடி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், 13.20 லட்சம் ரூபாயில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினார். மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகி செந்தில்குமார் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் வந்த பின் விவசாயத்திற்கு ஆள் கிடைப்பது இல்லை. விவசாயத்தை பற்றி அமைச்சருக்கு தெரிந்து இருந்தால் இப்படி சொல்லி இருக்க மாட்டார். இந்தியவில் 1000 ஏக்கர் 5 பேர் வைத்து செய்யும் முறை பற்றி சொன்னால் இங்கும் விவசாயம் செழிக்கும். இதை அவரிடம் யாராவது சொன்னால் நலம். தினமலர் உதவுமா ?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.