கொடைக்கானல்: கொடைக்கானலில் புலிகள் காட்டுமாடுகளை வேட்டையாடி வருவதால் வனத்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் 2012 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. மலைக்குன்றில் இருக்கும் புல்வெளிகளும், பள்ளத்தாக்குகளில் இருக்கும் சோலைகளும் இயற்கையின் கொடையாக அமைந்துள்ளன. இங்கு காட்டு மாடுகள், பன்றிகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. இவை விளைநிலங்களை நாசம் செய்தும், நகருக்குள்ளும் இரை மற்றும் குடிநீரை தேடியும் வர துவங்கியுள்ளன.
காட்டுமாடுகள், காட்டு பன்றிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. இவற்றை தடுக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர்.
புலிகள் நடமாட்டம் : கொடைக்கானல் மலையில் சமசுற்றுச்சூழல்நிலை இல்லாமல் இருந்தது. அதாவது காட்டு மாடுகள் மற்றும் காட்டு பன்றிகளை வேட்டையாடும் புலிகள், சிறுத்தைகள் இல்லை. தற்போது புலிகள் பேரிஜம், குக்கால், வந்தரேவு ஆகிய பகுதிகளில் நடமாடத்துவங்கியுள்ளன. சமீபத்தில், இவை தாக்கி மூன்று காட்டு மாடுகள் இறந்துள்ளன. புலிகளின் கால்தடம் இருப்பதையும் வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
வன அலுவலர் வெங்கடேஷன் கூறியதாவது,""கேரள வனப்பகுதியில் இருந்து கொடைக்கானல் மலை பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்குள் புலிகள் வரத்துவங்கியுள்ளன. இவை காட்டு மாடுகள், பன்றிகளை வேட்டையாடியுள்ளன. புலிகளின் கால்தடங்களையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். புலிகள் நடமாட்டம் மகிழ்ச்சியானதாகும். காட்டு மாடுகள் நகரப்பகுதிக்கும், விளைநிலங்களுக்கும் செல்லாமல் இருப்பதற்கு ரோட்டு ஓரங்களில் உள்ள களைக் கொல்லிகளை அகற்றி, புல் வெளிகளை அமைத்து வருகிறோம். குடிநீருக்கு ஆங்காங்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் காட்டு மாடுகள் நகரப்பகுதிக்குள் வராத நிலை ஏற்படும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.