வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் திரளும் பக்தர்களால் வீசப்படும் பாலிதீன் பைகள் உள்ளிட்ட குப்பைக்கழிவுகளால், மலையின் சுற்றுச்சூழலுக்கு கேடு, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல், வன விலங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற மலைவாச சிவஸ்தலமான சதுரகிரி மலையில், புத்தாண்டு தரிசனத்திற்காக, மதுரை மாவட்டம் சாப்டூர் வாழைத்தோப்பு, தேனி மாவட்டம் வருஷநாடு உப்புத்துறை, விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை வழியாக ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இங்கு விசேஷ நாட்களில் திரளும் பக்தர்கள், பூஜை சாமான்கள், உணவு, குடிநீர் முதலியவற்றை பாலிதீன் பைகளிலேயே கொண்டு செல்கின்றனர். மீதமாகும் உணவுப்பொருட்களுடன் பாலிதீன் பைகளோடு வீசியெறிகின்றனர். அதை விலங்குகள் அப்படியே தின்பதால், உடல் உபாதை ஏற்பட்டு இறக்கின்றன. மலையின் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்பட்டு, நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க சில ஆண்டுகளுக்கு முன் பாலிதீன் பைகளை கொண்டு செல்ல, வனத்துறையினர் தடை விதித்தனர். அத்துடன் அடிவார தாணிப்பாறை, வாழைத்தோப்பு, உப்புத்துறை ஆகிய இடங்களில் வனத்துறையினர் செக்போஸ்ட் அமைத்து பக்தர்கள் கொண்டு செல்லும் பை, உடமைகளை சோதனை செய்து பறிமுதல் செய்தனர். விசேஷ நாட்களுக்கு சிலதினங்களுக்கு முன்பே மலையில் கடைகள் அமைப்பவர்கள் கட்டுக்கட்டாக பாலிதீன் பை, தண்ணீர் பாக்கெட்டுகள், புகையிலை, பான்பராக் போன்ற தடைவிதிக்கப்பட்ட பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். அவை மலைகளில் முழுக்க சிதறி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. நாட்டுநலப்பணி திட்டத்தினர் திருவிழா முடிந்தபின் அவற்றை சேகரித்து கீழே கொண்டு வருகின்றனர். அவர்களும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே சேகரிக்க முடிகிறது. கடந்த ஆடி அமாவாசை திருவிழாவில் சேகரிக்கப்பட்ட பாலிதீன்பைகள் மட்டும் 4 டன் அளவிற்கு இருந்தது. தற்போது வரவுள்ள புத்தாண்டு, பொங்கல் தரிசனத்திற்கும் ஆயிரக்கணக்கானோர் மலையில் திரள்வார்கள். அதற்கு முன்பே கடை அமைப்பவர்கள் மலைக்கு பொருட்களை கொண்டு சென்றுவிடுவார்கள். வனத்துறையினர் மலையடிவாரத்தில் உள்ள பாதைகளில் நிரந்தர செக் போஸ்ட் அமைத்து கண்காணிப்பு செய்ய வேண்டும். அப்போதுதான் சதுரகிரி மலையில் புனிதமும், சுற்றச்சூழலும் பாதுகாக்கப்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.