கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பகுதியில், மத்திய அரசின் இந்திய தாதுக்கள் வெளிக் கொணரும் கழகம் - எம்.இ.சி.எல்., சார்பில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி ஆய்வு பணி, நிறைவு அடைந்தது. இந்தியாவில், நிலக்கரியில் இருந்து மின் உற்பத்தியின் திறனை அதிகரிக்கும் நடவடிக்கையாக, பல மாநிலங்களில், எம்.இ.சி.எல்., குழுவினர், ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கீழக்கரை, சாயல்குடி உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்ட முதல் ஆய்வில், நிலக்கரி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிய வந்தது. இதை தொடர்ந்து, எம்.இ.சி.எல்., கீழக்கரை திட்ட பிரிவின் மேலாளர் தலைமையில், 2010 நவம்பர் முதல், கீழக்கரையில் முகாமிட்டு, நிலக்கரி ஆய்வுப் பணியை மேற்கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில், ஆழ்குழாய் உதவியுடன் நிலக்கரி ஆய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளது.
எம்.இ.சி.எல்., அதிகாரி ஒருவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை, டில்லி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்குள்ள நிபுணர்களின் ஆய்வுக்கு பின், பூமிக்கடியில் நிலக்கரியின் அளவு கண்டறியப்படும். அதிகளவில் கிடைக்கும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே, அடுத்தக்கட்ட பணி துவங்கும்.
இதற்கிடையே, கும்பகோணம் பகுதியில், ஆய்வுக்கான உத்தரவு வந்துள்ளது. ஆய்வு பணி மேற்கொள்ள அங்கு செல்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.