விருதுநகர்: சிவகாசி அருகே தனியார் மொபைல் டவரால் ஏற்பட்ட கதிர் வீச்சில், ஐந்து குழந்தைகள் பலியானதை தொடர்ந்து, அதை அகற்ற மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறியதாவது: சிவகாசி அருகே பள்ளபட்டி நேரு காலனியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள தனியார் மொபைல் டவரில் ஏற்பட்ட கதிர் வீச்சால், ஐந்து குழந்தைகள் பலியாகினர். 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளைக்காய்ச்சல், நரம்பு தளர்ச்சி நோயால், பாதிக்கப்பட்டுள்ளதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து, மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபலிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். மொபைல் டவரின் கதிர்வீச்சு குறித்து ஆய்வு செய்யவும், டவரை இடமாற்றம் செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.