தர்மபுரி: தர்மபுரி அருகே, கலவரம் பாதித்த பகுதிகளில், தேசிய மனித உரிமை ஆணையக் குழுவின் விசாரணை நடந்து வருகிறது. தர்மபுரியை அடுத்த, செல்லன்கொட்டாயை சேர்ந்த நாகராஜ், "கவுண்டர்' மகள் திவ்யா, 21. நத்தம், "காலனி'யை சேர்ந்த இளங்கோ மகன் இளவரசன், 23, என்பவரும், அக்., 14ம் தேதி, பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டனர். வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை, திவ்யா காதல் திருமணம் செய்து கொண்டதால், மனவேதனை அடைந்த நாகராஜ் கவுண்டர், நவ., 7ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். ஆத்திரம் அடைந்த அவரின் உறவினர்கள், நாயக்கன்கொட்டாயில் அவரின் பிணத்தை வைத்து, சாலை மறியல் செய்தனர். இதில் ஏற்பட்ட கலவரத்தில், நத்தம் காலனி, அண்ணாநகர், செங்கல் மேடு, கொண்டம்பட்டியில் உள்ள, 300 வீடுகள் தீக்கிரையாகின. இது தொடர்பாக போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், 143 பேரை கைது செய்தனர். மாவட்டம் முழுவதும், 88 கிராமங்களில், கடந்த, 14ம் தேதி முதல், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாயக்கன்கொட்டாய் கலவரம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையத்தை சேர்ந்த, டி.எஸ்.பி.க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், விசாரணை நடத்த வந்துள்ளனர். நாகராஜ் கவுண்டரின் மனைவி தேன்மொழியிடம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, நேற்று விசாரணை நடந்தது. அதை தொடர்ந்து, நத்தம் காலனியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர்கள், அப்பகுதி மக்களிடம் கலவரம் மற்றும் பாதிப்பு குறித்து, தனித்தனியே விசாரணை செய்தனர். நாயக்கன்கொட்டாய் கலவரம் தொடர்பாக, வரும், 28ம் தேதி வரை, விசாரணை செய்ய உள்ள இவர்கள், கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களையும் சிறையில் சந்தித்து விசாரிக்க உள்ளனர்.
நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு : தேசிய மனித உரிமை ஆணைய குழு விசாரணை குறித்து செய்தி சேகரிக்க, பத்திரிக்கை நிருபர்கள், நேற்று காலை, 11:00 மணிக்கு நத்தம் காலனிக்கு சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதி மறுத்தனர். இது குறித்து கலெக்டர் (பொறுப்பு) ராமரிடம் நிருபர்கள் கூறி, நத்தம் காலனிக்கு செல்ல அனுமதி பெற்று, அங்கிருந்த எஸ்.ஐ., சின்னச்சாமியிடம் இத்தகவலை தெரிவித்தனர். இதுகுறித்து சின்னச்சாமி, எஸ்.பி., அலுவலக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள், "நிருபர்களை அனுமதிக்க வேண்டாம்' என, கூறியதை அடுத்து, அனுமதி மறுக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு பின், எஸ்.ஐ.,யிடம், நிருபர்களை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகே நிருபர்கள், நத்தம் காலனிக்குள் சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.