ஆண்டிபட்டி: வைகை அணை நீர் தேக்கப்பகுதியில் தேங்கியுள்ள வண்டல் படிவங்கள் குறித்து, "சோனா மீட்டர்' மூலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வைகை அணை கட்டப்பட்டு, 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.வருஷநாடு மலைப்பகுதியில் இருந்து வைகை அணைக்கு வரும் நீரில், ஏராளமான வண்டல் மண் கலந்து வருகிறது. இது அணையின் நீர் தேக்கப்பகுதியில் படிந்துள்ளது. இதனால் அணையில் தேங்கும் நீரின் அளவு குறைகிறது. தற்போது, அணையில் 15 அடி அளவுக்கு சகதி தேங்கி உள்ளது. அணை உயரம் 71 அடி. அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றினால் கூடுதலான நீர் தேக்கமுடியும். இதனால், நீர் தேக்கப்பகுதியில் படிந்துள்ள வண்டல் படிமங்கள் குறித்த ஆய்வுகளை துவக்கி உள்ளனர். பொள்ளாச்சி நீர் பிடிப்பு பராமரிப்பு வாரியக்கோட்ட உதவி செயற்பொறியாளர் கனகா, உதவி பொறியாளர் சுமதி உட்பட ஒரு பிரிவினர், படகில் சோனாமீட்டர் உதவியுடனும், தரைப்பகுதிகளில் பெரியாறு மேம்பாட்டு மதுரை கோட்டம்-7ன் உதவிபொறியாளர்கள் குபேந்திரன், ராதாகிருஷ்ணன் உட்பட ஒரு பிரிவினர் மற்றொரு அணியாகவும் ஆய்வுகளை துவக்கி உள்ளனர். திருநெல்வேலி பெருஞ்சாணி அணையில் இருந்து கொண்டு வரப்பட்ட அன்னப்பறவை என்னும் இலகு எடை கொண்ட பிளாஸ்டிக் படகில் சென்று, சோனா மீட்டரை பயன்படுத்தி, நீரின் அடிப்பகுதிக்கு ஒலிகளை அனுப்பி, திரும்பி வரும் நேரத்தை கணித்து வண்டல் படிவங்களை அளவீடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வுப்பணிகள் ஒரு மாதம் வரை நடைபெறும் என்றும், ஆய்வுகள் முடிந்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்ட பிறகே அடுத்த கட்ட பணிகள் துவங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.