சென்னை: "கொலை மிரட்டல் விடுத்து வரும், பா.ம.க., காடுவெட்டி குரு எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பு தர வேண்டும்' என, காதல் ஜோடி ஒன்று, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சமடைந்து, புகார் அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம், படைத்தலைவன்குடியைச் சேர்ந்தவர் வினோதா, 22. அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரை காதலித்து, செப்., 28ம் தேதி, கும்பகோணத்தில் பதிவுத் திருமணம் செய்துள்ளார்.
தற்போது, சென்னை, தேனாம்பேட்டையில் வசித்து வரும் இவர்கள், நேற்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்திருந்தனர். வினோதா அளித்த புகார் விவரம்: நான், இந்து படையாச்சி இனத்தைச் சேர்ந்தவள்; ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த தேவேந்திரனை காதலித்து, பதிவுத் திருமணம் செய்து கொண்டேன்.
என் கணவரை விட்டு பிரிந்து வரவில்லை என்றால், கொலை செய்து விடுவோம் என, கும்பகோணத்தைச் சேர்ந்த ரவுடி முருகன், என் மாமா கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., தவமணி ஆகியோர் மிரட்டி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு பகுதியில் நடந்த கொலை போல், உங்களையும் கொலை செய்து விடுவோம்; வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு உத்தரவு போட்டுள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர். எனக்கோ, கணவர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கோ உயிர் சேதம் ஏற்பட்டால், காடுவெட்டி குரு எம்.எல்.ஏ., உள்ளிட்ட நான்கு பேரையே சாரும். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, என் குடும்பத்தாருக்கு தக்க பாதுகாப்பு அளித்து, உயிர்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு வினோதா புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மனு, விசாரணைக்காக, தி.நகர்., துணை போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.