ராமேஸ்வரம்: பலத்த காற்றால், ஆந்திரா செல்ல முடியாமல், ஒன்பது நாளாக, பாம்பன் கடலில் மிதவை கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து, ஒடிசா மாநிலம், பாரதீப் துறைமுகம் செல்வதற்காக, 10 மாலுமிகளுடன் டிச., 17ல், பாம்பன் கடலுக்கு, மிதவை கப்பல் வந்தது. அப்போது, வங்க கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது; கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால், பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை திறக்க, துறைமுக அதிகாரிகள் அனுமதி தரவில்லை. கடலில் இயல்பு நிலை திரும்பியவுடன், பாலத்தை கடக்கலாம் என, அதிகாரிகள், கப்பல் மாலுமியிடம் தெரிவித்துள்ளனர். நேற்றுடன், ஒன்பதாவது நாளாக, பாம்பன் குந்துகால் கடற்கரையில், மிதவை கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றால், மும்பை செல்ல முடியாமல், வேறு ஒரு மிதவை கப்பலும், ராமேஸ்வரம் கடலில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.