Blast at mecheri : 7 killed | வாணவெடி தயாரிப்பு ஆலை வெடித்து சிதறியதில் 7 பேர் பலி : மேச்சேரியில் நடந்த கோர விபத்தில் 6 பேர் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாணவெடி தயாரிப்பு ஆலை வெடித்து சிதறியதில் 7 பேர் பலி : மேச்சேரியில் நடந்த கோர விபத்தில் 6 பேர் படுகாயம்

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
வாணவெடி தயாரிப்பு ஆலை வெடித்து சிதறியதில் 7 பேர் பலி : மேச்சேரியில் நடந்த கோர விபத்தில் 6 பேர் படுகாயம்

மேட்டூர்: வாணவெடி தயாரிப்பு ஆலை மற்றும் குடோன் வெடித்து சிதறியதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சிறுவர்கள் உட்பட, ஏழு பேர் பலியாயினர்; ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். அனுமதியில்லாமல் ஆலை இயங்கியது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.தர்மபுரி மாவட்டம், கம்பட்டி பஞ்., பாப்பம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி, 40. இவரது கணவர் சரவணன். சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, மேச்சேரி அடுத்த செங்காட்டூர் பிரிவு ரோட்டில், வாணவெடி த

யாரிக்கும் ஆலை மற்றும் குடோன் வைத்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், வெடி விபத்தில் சரவணன் இறந்துவிட்டார்.
பின் சாந்தி, வெடி தயாரிப்பு ஆலையை நிர்வகித்து வந்தார். செங்காட்டூர் பிரிவு ரோடு பகுதியில், வாணவெடி தயாரிக்கவும், வெடிகளை குடோனில் சேமிக்கவும் சாந்தி, 2009ல் உரிமம் பெற்றிருந்தார். கடந்த மார்ச் மாதத்துடன், மூன்றாண்டு உரிமம் முடிந்துவிட்டது. மீண்டும் உரிமத்தை புதுப்பிக்க விண்ணபித்த போதிலும், இதுவரை வருவாய் துறை அனுமதி வழங்கவில்லை. சட்டவிரோதமாக, சாந்தி தன் ஆலையில் வாணவெடி மற்றும் பாறைகளை தகர்க்கும் வெடிகளை தயாரித்தார்.
நேற்று ஆலையில், 17க்கும் மேற்பட்டோர் வேலை செய்தனர். விடுமுறை நாளான நேற்று, தொழிலாளர்கள், தங்கள் குழந்தைகளையும் ஆலைக்கு அழைத்து வந்து வேலை செய்தனர். நேற்று பகல், 1:45 மணி அளவில் திடீரென வெடி தயாரிக்கும் ஆலையில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. சில நிமிடங்களில் வெடி தயாரிப்பு கூடம், குடோன் அனைத்தும் வெடித்து சிதறின.விபத்தில் வாணவெடி ஆலை உரிமையாளர் சாந்தி, அவரது மகன் சூர்யா, 10, சாந்தி, 35, சிவகாமி, 28, கேசவன், 13, ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெடி விபத்தில், ஆலையில் இருந்தவர்களின் உடல்கள் சிதறி துண்டு துண்டாகின. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள், 108 அவசரகால ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சிதறிய உடல்களை, சேலையில் கட்டி, ஆம்புலன்சில் போட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் உடல்களில், பெரும்பாலான பாகங்கள் சிதைந்த நிலையில் இருந்தது. கை, கால் பொசுங்கிய நிலையில் இருந்தவர்கள், வலியால் அலறி துடித்தனர். டல் கருகிய நிலையில் படுகாயம் அடைந்த விமலா, 17, விஜயா, 35, ஈஸ்வரி,35, பழனியப்பன், 40, சதீஷ், 14, பவித்ரா, 11, மனோஜ்குமார், 12, தங்கம், 35 ஆகியோர், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், விஜயா, ஈஸ்வரி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, பலியானவர்கள் எண்ணிக்கை, ஏழாக உயர்ந்து உள்ளது.
வேலை செய்த தொழிலாளர் சிலர், 10 அடி தூரத்துக்கு மேல் தூக்கி வீசப்பட்டனர். வெடி மருந்து குடோனில் இருந்து தீயணைப்பு கருவி, உணவு பாத்திரங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. விபத்து குறித்து, மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அதிகாரிகள் அலட்சிய நடவடிக்கையும், அனுமதியில்லாமல் ஆலை செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு ஓடி வந்த உறவினர்கள், இறந்தவர்களின் உடலைப் பார்த்தும், காயமடைந்தவர்களை பார்த்தும் கதறி அழுதனர். சிகிச்சை பெறுவோரின் உடல்நிலை மிகவும் ÷
மாசமான நிலையில் உள்ளது. இந்த விபத்தில், உயிர்பலி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வெடி விபத்து தொடர்பாக தகவல் அறிந்து, செங்காட்டூர், பாறையூர் பகுதி பொதுமக்கள், சேலம் பகுதியில் உள்ளோர், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனை முன், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

யார் மீது நடவடிக்கை? : எந்தவொரு விபத்து நடந்தாலும், விபத்துக்கு, காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், அவர்களின் அஜாக்கிரதை, பணியில் கவனமின்மை, அலட்சியம் உள்ளிட்டவற்றை மூடி மறைத்து விடுகின்றனர். "லைசென்ஸ்' பெறாமல் வெடி மருந்து குடோன் இயங்கியவர்கள் மீது, கைது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், சட்டத்தை தங்களுக்கு, சாதகமாக வளைத்து தப்பித்து விடுகின்றனர். இதுவே, பெரிய விபத்து நடக்கும் வேளையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், "சஸ்பெண்ட்' செய்தும் உயர் அதிகாரிகள் தற்காலிக நிவாரணம் தேடி கொள்கின்றனர். ஒரு விபத்து நடக்கும் போது, அந்த விபத்துக்கு காரணமான கடைநிலை ஊழியர் முதல், உயர் அதிகாரி வரை, அனைவர் மீதும், கடும் நடவடிக்கை எடுப்பது இல்லை. நேற்று, மேச்சேரி அருகே நடந்த கோர விபத்துக்கு, போலீஸ், வருவாய்துறை அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும். அப்போது தான் முறையான, முழுமையான ஆய்வு நடத்திட அதிகாரிகள் முன்வருவர்.

"விசாரிப்போம்' வழக்கம் போல கலெக்டர் பதில் : மேச்சேரியில் நடந்த, வெடிவிபத்தில் படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்øகாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை, கலெக்டர் மகரபூஷணம் நேரில் பார்வையிட்டார்.
அப்போது, நிருபர்களிடம் கலெக்டர் மகரபூஷணம் கூறுகையில், ""விபத்தில், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் யாரும் அங்கு பணியமர்த்தப் படவில்லை. தாய், தந்தையுடன், அவர்கள் வந்திருக்கலாம். வெடி மருந்துகள் வைப்பதற்கான, அனுமதியை பெற்றுள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரிக்கப்படும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை