ஊட்டி: தொடர் விடுமுறை எதிரொலி யால், ஊட்டியில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில், பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது.
ஊட்டியில், சுற்றுலா ஸ்தலங்களான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு, சீசன் காலங்களை தவிர, நாள்தோறும் கணிசமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது, அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என, தொடர் விடுமுறை காரணமாக, அனைத்து சுற்றுலா ஸ்தலங்களிலும், பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. சுற்றுலா விடுதிகள், ஓட்டல்களில் அறை கிடைக்காமல், பலரும் அவதியடைந்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர். நேற்று, படகு இல்லம், தாவரவியல் பூங்காவில் கூட்டம் அதிகரித்திருந்தது. புத்தாண்டு முடியும் வரை, இதே நிலை தொடரும் என்பதால், உள்ளூர் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.