திண்டுக்கல்: திண்டுக்கல் ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டியை கொல்ல முயற்சி நடத்ததாக வந்த புகாரில், நான்கு பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். திண்டுக்கல் ஒன்றிய கவுன்சிலராக உள்ளவர் முத்துப்பாண்டி. இந்த ஆண்டு துவக்கத்தில் திண்டுக்கல்லில் தேவேந்திரகுல கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கொலை
செய்யப்பட்டார். இவ்வழக்கில், முத்துப்பாண்டி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம், ஸ்கீம் ரோட்டில் உள்ள இவரது அலுவலகம் அருகே கார் மீது குண்டு வீசப்பட்டதாகவும், இதில் கார் கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும் கூறி திண்டுக்கல் நகர் வடக்குபோலீசில், முத்துப்பாண்டியின் நண்பர் குணசேகரன் புகார் செய்தார்.நான்கு பேர் மீது வழக்கு: புகாரில், "ஸ்கீம் ரோடு அலுவலகம் அருகே காரில் இருந்தபோது, காரின் பின்னால் பலத்த சப்தம் கேட்டது. வெடிகுண்டு வீசி சிலர் கொல்ல முயற்சித்தனர். இது குறித்து முத்துப்பாண்டியிடம் தகவல் தெரிவித்தபோது, பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் எனது பெயரும் உள்ளதால், தன்னை கொல்ல முயற்சித்திருப்பர், இது குறித்து போலீசில் புகார் செய்,' என தெரிவித்ததாக குணசேகரன் கூறியுள்ளார். போலீசார், சந்தேகத்தின் பேரில், கரட்டழகன்பட்டியை சேர்ந்த சுப்புக்காளை, 35,
ஜெய்கணேஷ், திருநெல்வேலியை சேர்ந்த அதிசயபாண்டியன், சின்னபள்ளபட்டியை சேர்ந்த குமரேசன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.