மதுரை: துரையில், "டைம்பாம், பைப்' வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவர்களின் மொபைல் போன்களின் எண்கள், அப்பாவி மக்களின் ரேஷன்கார்டுகளை பயன்படுத்தி வாங்கியது, போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மதுரையில், கடந்தாண்டு முதல் தொடர்ந்து "டைம்பாம்' வெடிப்பதும், முன்கூட்டியே கண்டுபிடிப்பதுமாக சம்பவங்கள் தொடர்கின்றன. கடந்தாண்டு அக்.,28ல், திருமங்கலம் ஆலம்பட்டி தரைப்பாலத்தில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொல்ல வைக்கப்பட்டிருந்த "டூவீலர் பேட்டரி' "பைப்' குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில், முக்கிய குற்றவாளிகளான "போலீஸ்' பக்ருதீன், பிலால்மாலிக், தலைமறைவாக உள்ளனர். ஹக்கீம் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். ஆக.,4ல், மதுரை தெற்குகிருஷ்ணன் கோயில் சந்தில், ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு "டைம்பாம்' அனுப்பப்பட்ட வழக்கில், உமர்பாரூக் என்பவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்குகளில் தொடர்புடையவர்களின் மொபைல் போன்களை போலீசார் ஆய்வு செய்ததில், அனைத்தும் வேறு நபர்களின் பெயர்களில் பயன்படுத்துவது தெரிந்தது. போன் எண்ணுக்குரியவர்களிடம்
விசாரித்தபோது, அவர்களுக்கு சம்பந்தமில்லை என தெரிந்தது. பாலீஸ் கூறியதாவது: வெடிகுண்டு வழக்கில் தொடர்புடையவர்களின் நண்பர்கள் சிலர், மொபைல் போன் "ரீசார்ஜ்' கடை நடத்துகின்றனர். அவர்களிடம் புது இணைப்பு கேட்டு ரேஷன் கார்டு, போட்டோவை மக்கள் கொடுக்கும் போது, அதை ரகசியமாக "ஸ்கேனிங்' செய்து வைத்துக் கொள்கின்றனர். சில நாட்களுக்கு பின், அவர்களது பெயரில் இணைப்பு பெற்று, சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். வேலை முடிந்ததும், இணைப்பை துண்டித்து விடுகின்றனர். கடந்தாண்டு ஏப்.,30ல், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே டாஸ்மாக் "பார்' ல், "டைம் பாம்' வெடித்தது; செப்., 30ல் புதூர் பஸ் டெப்போ மற்றும் டிச.,7 ல் திருவாதவூரில் அரசு பஸ்களில் "டைம் பாம்' கண்டெடுக்கப்பட்டது. இந்தாண்டு மே 1ல், அண்ணாநகர் ராமர் கோயிலில், சைக்கிள் "டைம் பாம்' வெடித்தது. நவ.,1ல் திருப்பரங்குன்றம் மலையில், "டைம் பாம்' தயாரித்த வழக்குகளில், தொடர்புடையவர்கள், மேற்கூறிய முறையில் மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். அவர்களது இருப்பிடத்தை கண்டுபிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது, என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.