விருதுநகர்: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பொதுத் தேர்வு மையங்கள் இல்லாததால், கிராமப்புற மாணவர்கள் தவித்து வருகின்றனர். கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், கிராமப்புற அரசுப்பள்ளிகள் அதிகளவில், தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களுக்கான அனுமதியை, தேர்வுத்துறை வழங்க வேண்டும். அரசுப்பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைத்தால், பணிச்சுமை அதிகரிக்கும். இதனால், பலர் தேர்வு மையங்களுக்கு அனுமதி கேட்பதில்லை. தனியார் பள்ளிகள் துவங்கிய ஒரு ஆண்டில், தேர்வு மையங்களை பெற்று விடுகின்றன. அரசுப்பள்ளிகளில் ஆர்வம் காட்டுவதில்லை. கிராமப்புறத்தில் இருந்து தேர்வு எழுத, நகரங்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். போக்குவரத்து வசதியில்லாத கிராமங்களில் இருந்து, சரக்கு வாகனங்கள், டூவீலர்களில் தேர்வு மையங்களுக்கு செல்கின்றனர். மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அரசுப்பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இருந்தும், கிராமப்புற மாணவர்கள் அவதிப்படுகின்றனர். அரசுப்பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.