தாடிக்கொம்பு: திண்டுக்கல், தாடிக்கொம்பு அருகே தி.மு.க., பிரமுகரின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், திண்டுக்கல்லை சேர்ந்த கூலிப்படையினர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். உலகம்பட்டி வடக்கியூரை சேர்ந்தவர் கிறிஸ்டோர்,22. அகரம் பேரூர் தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர். இவரது தந்தை பாஸ்கர்,55. டெய்லர். கடந்த டிச.,6 ல், வேலை முடித்து, வீடு திரும்பியபோது, மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டர் தெய்வம், எஸ்.ஐ., முருகன் தலைமையிலான தனிப்படையினர் விசாரித்து, தமிழக வன்னிய கிறிஸ்துவ கூட்டமைப்பு தலைவர் மரியராஜ்,57, கூலிப்படையை சேர்ந்த சவேரியார் பாளையம் ஜான்பீட்டர், 23, பாறைப்பட்டி ஏ.பி., நகர் அப்புக்குட்டி (எ) மாரடோனா,23, ஆகிய மூவரை கைது செய்தனர். உலகம்பட்டியில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த விழாவிற்கு போஸ்டரில் பெயர் அச்சடித்தது தொடர்பாகவும், கொடுக்கல், வாங்கல் தொடர்பாகவும், மரியராஜூக்கும், பாஸ்கருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மரியராஜை, பாஸ்கர் இழிவாக பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மரியராஜ், பாஸ்கரை கொல்ல திட்டமிட்டு, திண்டுக்கல் முத்தழகுபட்டி பாஸ்கர், அந்தோணியார் தெரு சிமியோன்ராஜ், ஜான்பீட்டர், அப்புக்குட்டி ஆகியோரை, தயார் செய்தார். கடந்த டிச., 6 இரவு பாஸ்கரின் தையல் கடைக்குச் சென்ற கொலை கும்பல், அவர் கடைமூடிவிட்டு வந்தபோது, வெட்டிக்கொலை செய்தது. முதலில் மரியராஜ் கைதானதையடுத்து, முத்தழகுபட்டி பாஸ்கர், சிமியே õன்ராஜ் தலைமறைவாகினர். திசை திருப்பல்: டெய்லர் பாஸ்கர் கொலை செய்யப்பட்ட மறுநாள், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, சிலர் மறியலில் ஈடுபட்டனர். மறியலுக்கு, கொலை வழக்கில் கைதான மரியராஜ் தலைமை வகித்தார். போலீசாரை திசை திருப்பவே அவர், ரோடு மறியல் நாடகம் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.