பெரியகுளம்: ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகள் நெருங்கி வருவதால், ஜவுளிக்கடைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆயத்த ஆடைகளை 20 சதவீதத்தினர் மட்டுமே நாடிச்செல்கின்றனர். பெரும்பாலோர் துணிகளை தைத்து அணிவதிலேயே, ஆர்வம் காட்டுகின்றனர். தென்மாவட்டங்களில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான தையல் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பலர், தினமும் 14 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருப்பதால், பவர் மிஷினை பயன்படுத்தி, ஆர்டர் துணிகளை தைப்பதில் சிரமப்படுகின்றனர். இதனால், இவர்கள் பவர் மிஷினை ஓரம் கட்டி விட்டு, பழைய பெடல் (கால்களால் அமுக்கி வயர் சக்கரத்தை சுழற்றி தைக்கும்) இயந்திரத்தையே பயன்படுத்துகின்றனர். இதனால் புதிய பெடல் இயந்திரம் 4000 ரூபாயில் இருந்து, 8000 ரூபாயாக, இரண்டு மடங்காக விலை உயர்ந்துள்ளது. இரண்டாம் நிலை மிஷின்களுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு தையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பெரியகுளம் நகர செயலாளர் ராஜபாண்டி கூறியதாவது: காலமாற்றத்திற்கு ஏற்க, பவர் மிஷின்களை வாங்கி, துணிகள் தைத்து வந்தோம். மின்தடையால் பவர் மிஷினுக்கு "குட்பை' சொல்லிவிட்டு, பழைய பெடல்மிஷினை வாங்கியுள்ளோம். மின்தடையால் 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய பவர் மிஷினை, 7000 ரூபாய்க்கு கேட்கக்கூட ஆளில்லை, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.