தேவதானப்பட்டி: சென்னை ஐயப்ப பக்தர்கள், இன்னோவா காரில் சபரிமலைக்கு சென்று விட்டு, திரும்பிவந்தபோது,தேனி தேவதானப்பட்டி அருகே, லாரியுடன் மோதிக்கொண்ட விபத்தில், இருவர் இறந்தனர். காயமடைந்த நான்கு
பேர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சென்னை, செம்பன்சேரியைச் சேர்ந்தவர் பாலமுருகன்,36. இவரது மகன் ராகுல்,11, ஆவடியைச் சேர்ந்த தனபால்,38, சிட்லபாக்கம் சின்னச்சாமி, இவரது மகன் ராகுல்,14, ஆகியோர், இன்னோவா காரில், சபரிமலைக்கு சென்றுவிட்டு, நேற்று மதியம் தேனி வந்தனர். தேனியில் மதிய உணவை முடித்து விட்டு, பழனிக்கு புறப்பட்ட அவர்கள், பகல் 2.30 க்கு, தேவதானப்பட்டி, செங்குளத்துப்பட்டி அருகே சென்ற போது, திருச்சியில் இருந்து மணல் ஏற்றிவந்த டாரஸ் லாரியும், காரும் மோதிக் கொண்டன. இதில் பாலமுருகன், தனபால் பலியாகினர். காயமடைந்த சின்னச்சாமி, ராகுல், கார் டிரைவர் ராமகிருஷ்ணன், ராகுல் தேனி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராடி மீட்பு: இவ்விபத்தில் நொறுங்கிய காருக்குள் சிக்கிக் கொண்ட பாலமுருகன், தனபால் ஆகியோரின் உடல்களை பெரியகுளம் டி.எஸ்.பி., சேது தலைமையில், தீயணைப்பு வீரர்கள் மண்அள்ளும் இயந் திரத்தின் உதவியுடன் 45 நிமிடம் போராடி, மீட்டனர். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்துக்கு காரணம்: கார் டிரைவர் ராமகிருஷ்ணன் மூன்று நாட்களாக ஓய்வின்றி காரை ஓட்டி வந்துள்ளார். விபத்து நடந்த இடத்தில், டிரைவருக்கு தூக்கம் வரவே, கார் சாலையின் இடது பக்கம் உள்ள பள்ளத்தில், கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. விழித்துக் கொண்ட டிரைவர், காரை வலது பக்கமாக வேகமாக திருப்பி உள்ளார். அப்போது எதிரே வந்த லாரியில் மோதி, விபத்து ஏற்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.