மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, மேச்சேரி அடுத்த செங்காட்டூர் பிரிவு ரோட்டில், உள்ள வாணவெடி தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
வேலை செய்த தொழிலாளர் சிலர், 10 அடி தூரத்துக்கு மேல் தூக்கி வீசப்பட்டனர். வெடி மருந்து குடோனில் இருந்து தீயணைப்பு கருவி, உணவு பாத்திரங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. விபத்து குறித்து, மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அதிகாரிகள் அலட்சிய நடவடிக்கையும், அனுமதியில்லாமல் ஆலை செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு ஓடி வந்த உறவினர்கள், இறந்தவர்களின் உடலைப் பார்த்தும், காயமடைந்தவர்களை பார்த்தும் கதறி அழுதனர். சிகிச்சை பெறுவோரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த விபத்தில், உயிர்பலி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.வெடி விபத்து தொடர்பாக தகவல் அறிந்து, செங்காட்டூர், பாறையூர் பகுதி பொதுமக்கள், சேலம் பகுதியில் உள்ளோர், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனை முன், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.