தேனி: தேனி மாவட்ட மலைக்கிராமங்களில், சர்வே பணியில் ஈடுபடுவதாகக் கூறி, மக்களை ஒருங்கிணைக்கும் பணியில், ஆந்திர வாலிபர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 5 பேரிடம் சோத்துப்பாறை அணையில், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மாவட்டத்தில் ஊரடி, ஊத்துக்காடு, சொக்கன்அலை, அகமலை, கூக்கல், சோத்துப்பாறை, தம்பிரான் கானல் மலைக்கிராமங்களில், ஆந்திராவை சேர்ந்த சில வாலிபர்கள் சர்வே பணியில் ஈடுபடுவதாக, நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இவர்களை, போலீசார் கடந்த இரண்டு நாட்களாக கண்காணித்தனர்.
மலை கிராம மக்களிடம் பேசிய இந்த வாலிபர்கள், அவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மலைக்கிராமங்களில் வசதிகள் கேட்டு, அரசிடம் மனு கொடுங்கள். நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும், எனக்கூறி மூளைச்சலவை செய்தனர். நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசார், இவர்களிடம் விசாரணை நடத்திய போது, வனத்தில் உள்ள ஆமை, ஓணான், பல்லி போன்ற அபூர்வ விலங்குகளை பற்றிய சர்வே செய்ய வந்திருப்பதாக கூறினர். சந்தேகம் அடைந்த போலீசார், ஐந்து பேரை சோத்துப்பாறை அணைக்கு அழைத்து வந்தனர். இவர்களில் மூன்று பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். இரண்டு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது: இந்த வாலிபர்கள் கல்லூரி புரொஜக்ட் ஒர்க் செய்வதாக கூறி, வனக்கிராமங்களின் அபூர்வ வகை விலங்குகளை பற்றி சர்வே எடுப்பதாக தெரிவித்துள்ளனர். வனத்துறையிடம் அனுமதி பெற்றுள்ளனர். சர்வேக்கு வந்துள்ளதாக கூறிய இவர்கள், கிராம மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அரசுக்கு எதிராக தூண்டி விடும் முயற்சியில் ஏன் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. தற்போது, இவர்கள் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தம்பிரான்கானல் கிராமத்திற்கு செல்ல முயன்றனர். இவர்களை மடக்கி சோத்துப்பாறையில் வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதால், விசாரணை தொடர்கிறது. உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். வனத்துறை அனுமதி அளித்துள்ளதை மட்டும் காரணம் காட்டி, மலைக்கிராமங்களுக்கு செல்ல இவர்களை அனுமதிக்க முடியாது, என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.