ஊட்டி: ஊட்டி, மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில், விதிமுறைகளை மீறி, நாவல் மரங்கள் வெட்டப்பட்டு, இரவில் கடத்துவதற்காக, தேயிலை தோட்டத்தில், பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில், தேயிலை தோட்டங்களுக்கு, இடையே, நிழலுக்காக, சில்வர் ஓக் மரம், நாவல் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக,தேயிலை தோட்டங்களில், சில்வர் ஓக் மரம், நாவல் மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு, "பெர்மிட்' வாங்கி, சில்வர் ஓக் மரங்கள் வெட்டப்பட்டு, லாரிகளில் ஏற்றும் போது, அதன் இடையே, நாவல் மரத்தை கடத்துவது, சில மர வியாபாரிகளின் வாடிக்கையாக உள்ளது. மஞ்சூரின் பல பகுதிகளில் உள்ள, தேயிலை தோட்டங்களில், பல லட்சம் ரூபாய் மதிப்புடைய நாவல் மரங்கள் அனுமதியில்லாமல் வெட்டப்பட்டு, இரவு நேரங்களில் லாரிகளில் கடத்தப்படுகின்றன. உள்ளூர் மக்கள் கூறுகையில், "வனத்துறை அமைச்சகத்தின் சார்பில், மரங்களை எடுத்து செல்ல, சமீபத்தில் கொண்டு வரப்பட்ட தளர்வுக்கு பின், பல்வேறு பட்டியல் வகை மரங்கள் இவ்வாறு கடத்தப்படுகின்றன' என, குற்றம் சாட்டினர்.இப்பகுதி வன ஊழியர்களிடம் கேட்டபோது, "குறிப்பிட்ட இடங்களில் ஆய்வு செய்யப்படும்' என்ற, வழக்கமான பதிலைக் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.