Theft attempt at temple | கோவிலில் திருட முயற்சி : அலாரம் ஒலித்ததால் ஓட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவிலில் திருட முயற்சி : அலாரம் ஒலித்ததால் ஓட்டம்

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பல்லடம்: பல்லடம் அருகே, பழமையான, உலகேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை, ஐம்பொன் சிலைகளை திருட முயன்றபோது, உட்புறம் பொருத்தப்பட்டுள்ள, அலாரம் ஒலித்ததால், திருடர்கள் தப்பியே õடினர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, அல்லாளபுரத்தில், உண்ணாமலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு, பூஜை முடிந்ததும், பூசாரி மாணிக்கவாசகம், கோவிலை பூட்டிவிட்டு, அருகில் உள்ள, தனது வீட்டுக்கு சென்றார். அதிகாலை 3.00 மணிக்கு, கோவில் அலாரம், ஒலிக்க துவங்கியதால் அதிர்ச்சி அடைந்த பூசாரி மற்றும் பொதுமக்கள், கோவிலுக்கு திரண்டு சென்றனர். அதைபார்த்த, திருடர்கள், திருட்டு முயற்சியை கைவிட்டு, மூங்கில் ஏணி மூலம், சுவர் ஏறி குதித்து தப்பினர். திருடர்கள், கோவில் பக்கவாட்டு கதவை கடப்பாரையால் நெம்பி திறக்க முயன்றபோது, அலாரம் ஒலித்துள்ளது. கோவிலில் இருந்த நடராஜர், சிவகாமி ஜம்பொன் சிலைகள் மற்றும் மூன்று வெள்ளி கவசங்கள் தப்பின. இவற்றின் மதிப்பு ரூ.ஏழு லட்சம். சம்பவம் தொடர்பாக, பல்லடம் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று நடந்த சம்பவம் ஆறாவது முறை. ஆக., 30ல் திருட்டு முயற்சி நடந்தபோது, உஷாரான கோவில் நிர்வாகம், ரூ.13 லட்சம் மதிப்புள்ள ஏழு ஐம்பொன் சிலைகளை, பேரூரில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறைக்கு, சொந்தமான, பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை