மதுரை: உரிய அரசு உத்தரவு பெற்றிருந்தும், ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற, வணிகப் பொருளியல் பட்டதாரிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. மே 27ல் முதுகலை பட்டதாரிகளுக்கான பணி நியமன தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட பல்வேறு கல்லூரிகளில் பி.பி.இ., (வணிகப் பொருளியல்) முடித்த முதுநிலை பட்டதாரிகளும் தேர்வு எழுதினர். மதுரை மாவட்ட கல்லூரிகளில் படித்த 17 பட்டதாரிகள் உட்பட தென்மாவட்டத்தினர் ஏராளமானோர் தேர்வு எழுதினர். அவர்களுக்கு 4.8.2012ல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. சில மாவட்டங்களில் "பொருளியல்' பட்டத்துக்கு இணையானதாக இல்லை என, "பி.பி.இ., பட்டம்' பெற்ற பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டது. தேர்வில் வெற்றி பெற்று பணி வாய்ப்பு கிடைக்காத முதுகலை பட்டதாரிகள் கூறியதாவது: தேர்வில் வெற்றி பெற்ற எங்கள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தேர்ச்சி பெற்றவர் விவரத்தை 11.12.2012ல் அவசரமாக டி.ஆர்.பி., வெளியிட்டது. அந்த தேர்வு பட்டியலில் எங்கள் பெயர்கள் இல்லை. பி.ஏ., (பொருளியல்) பட்டத்துக்கு இணையானதாக பி.பி.இ., (வணிக பொருளியல்) இல்லை என கூறப்பட்டது. மதுரை காமராஜ் பல்கலை பதிவாளரின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு இதற்கான (அரசாணை எண்:104/ 12.8.2005) உத்தரவை வழங்கிஉள்ளது. இது, 20.12.1993ல் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் அரசாணை (நிலை) எண்: 441ல் வெளியிடப்பட்ட உத்தரவுக்கு ஏற்ப, இணைக் கல்வி தகுதி நிர்ணய பரிசீலிப்புக் குழு முடிவுப்படி அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த அரசாணை இருந்தால் போதும் என, டி.ஆர்.பி., ஏற்கனவே தெரிவித்தது. ஆனால், தற்போது பணி வாய்ப்பு அளிக்காதது வேதனையளிக்கிறது, என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.