அன்னூர் : "வங்கியல்லாத
நிதி நிறுவனங்கள் குறித்து சுய உதவி குழுக்கள் விழிப்புணர்வாக இருக்க
வேண்டும்,' என குன்னத்தூரில் நடந்த பயிற்சி வகுப்பில் அறிவுறுத்தப்பட்டது.
சேவா
பாரதி தொண்டு நிறுவனம் சார்பில், குன்னத்தூரில், மகளிர் சுய உதவி
குழுக்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சி வகுப்பில்,
மாநில பொருளாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில்,""சுனாமி, குஜராத் பூகம்பம்
மற்றும் நீலகிரி மாவட்ட நிலச்சரிவின்போது, சேவா பாரதி அமைப்பை சேர்ந்த
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நிவாரண பணியில் ஈடுபட்டனர். குழு
உறுப்பினர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவது எவ்வளவு முக்கியமோ, அதை
விட நம் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை பேணி காப்பதும், குழந்தைகளுக்கு
கற்றுக்கொடுப்பதும் முக்கியம். குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் இலவச
டியூஷன் மையம் நடத்தலாம்,'' என்றார். மகளிர் குழு ஒன்றிய
ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா மணி பேசுகையில்,""சில தனியார் வங்கிகளும்,
வங்கியல்லாத நிதி நிறுவனங்களும், கிராமங்களுக்கு வந்து, அதிக வட்டிக்கு
குழுக்களுக்கு பணம் தருகின்றன. அதிக வட்டியால், அந்த கடனிலிருந்து எளிதில்
மீள முடியாது. இதுகுறித்து, குழுக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த
வேண்டும்.
இந்தியன் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பொதுத்துறை
வங்கிகளில், குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது என்பதை அனைத்து
குழுக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.மாவட்ட செயலாளர் சுப்புராஜ், நிர்வாகி கிருஷ்ணம்மாள் ஆகியோர் பேசினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.