அன்னூர் : அன்னூர் பேரூராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. அன்னூர் பேரூராட்சி வார்டு எண் 9, 13, 14, 15 ஆகியவற்றில், கோவை ரோடு, அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோட்டில், மூன்று இடங்களில், தலா நான்கு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில், ஆழ்குழாய் கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்துதல், 11வது வார்டில், நான்கு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி அமைத்தல், 2வது வார்டு, அல்லிகுளம், புதுக்காலனியில், நான்கு லட்சம் ரூபாயில் கான்கிரீட் சாலை அமைத்தல், 7வது வார்டில், கரியாம்பாளையம் ரோட்டில், மூன்று லட்சத்து 85 ஆயிரம் ரூபாயில், வடிகால் மற்றும் சிறுபாலம் அமைத்தல், என ஆறு பணிகளுக்கு 25 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை அவிநாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கியுள்ளார்."இப்பணிகளை துவக்க, சம்மந்தப்பட்டவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்படுகிறது,' என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.