அன்னூர் : அன்னூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில், பொதுநிதியில் வளர்ச்சி பணிகள் தேர்வு செய்யப்பட்டன. அன்னூர்
ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் சேர்மன் கண்ணம்மாள்காளியப்பன் தலைமையில்
நடந்தது. பி.டி.ஓ.,க்கள் பூபதி, கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் ஐந்து முதல் ஆறு
லட்சம் ரூபாய்
செலவில் செய்யக்கூடிய பணிகளை தேர்வு செய்து சமர்ப்பித்தனர்.
கவுன்சிலர்
பக்தராஜ் பேசுகையில்,""மேற்கு மாணிக்கம்பாளையத்திற்கு கான்கிரீட் ரோடு
அமைக்க வேண்டும்,'' என்றார். கவுன்சிலர் ராமசாமி
பேசுகையில்,""மோளபாளையத்தில் வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீர் ரோட்டில்
நிற்கிறது. வடிகால் கட்ட
நிதி ஒதுக்க வேண்டும். பச்சாபாளையம் மற்றும் பூராண்டாம்பாளையத்தில் கான்கிரீட் ரோடு அமைக்க வேண்டும்,'' என்றார். கவுன்சிலர்
சாய் செந்தில் பேசுகையில்,""சாளையூர் காலனி மற்றும் தோப்பு தோட்டம் காந்தி
நகரில், தலா 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்
நிலைத்தொட்டி மற்றும் போர்வெல் அமைக்க வேண்டும், என, தமிழ்நாடு குடிநீர் வடிகால்
வாரியத்திடம்
பல முறை தெரிவித்தும் பயனில்லை. ஒன்றிய அதிகாரிகள், இதுகுறித்து குடிநீர்
வடிகால் வாரிய அதிகாரிகளிடம் வற்புறுத்த வேண்டும்,'' என்றார்.காரேகவுண்டன்பாளையம் காலனி மற்றும் நல்லிசெட்டிபாளையத்தில் தலா 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி தலா 3.40 லட்சம் செலவில் கட்டும் பணியும், நல்லிசெட்டிபாளையத்தில் 700 மீட்டர் நீளத்திற்கு பைப்லைன் அமைக்கும் பணியும் தேர்வு செய்யப்பட்டன. கவுன்சிலர்கள் கவிதா, லட்சுமி, குப்புசாமி உள்ளிட்டோர்
தங்கள் பகுதிக்கான தேவைகள் குறித்து பட்டியல் சமர்ப்பித்தனர். துணை
பி.டி.ஓ.,க்கள் ஸ்டீபன், பாலுசாமி, ஒன்றிய பொறியாளர்கள் சேதுராமன்,
ரகுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.