"டெடா'வின் புதிய அணுகுமுறை காரணமாக சூரிய மின் உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சூரிய மின் உற்பத்தி செய்வோர், வங்கி உத்தரவாதத்துக்கு பதிலாக, பாதுகாப்புத் தொகையாக ரொக்கத்தை செலுத்த வேண்டும் என்ற, "டெடா'வின் புதிய நிபந்தனையால், உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புனல், நிலக்கரி, வாயு ஆகிய, மரபு சார்ந்த ஆதாரங்களில் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு, குறைந்து வருகிறது. இதனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கும் விதமாக, சூரிய சக்தி மூலம், மின் உற்பத்தி செய்யும் திட்டத்தின் மொத்த முதலீட்டில், 30 சதவீதத்தை, மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.

4,000 மெகாவாட் பற்றாக்குறை : மாநிலத்தில், தற்போது, 4,000 மெகாவாட் அளவிற்கு, மின் பற்றாகுறை நிலவுகிறது. மரபு சாரா எரிசக்தியை, ஊக்குவிக்கும் வகையில், சூரிய சக்தி மூலம், மின் உற்பத்தியை பெருக்கும் திட்டங்களுக்கு, மாநில
அரசும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த ஆண்டு, அக்டோபர் மாதம், புதிய சூரிய சக்தி கொள்கையை, தமிழக அரசு வெளியிட்டது. வீடுகளில் மின்சார உற்பத்தியை ஊக்குவிக்க, உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை; தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நுகர்வோர், தங்கள் மொத்த பயன்பாட்டில், 6 சதவீதத்தை, சூரிய சக்தியில் உற்பத்தியாகும்,
மின்சாரத்தில் இருந்து பெறுவது கட்டாயம் ஆகியவை, புதிய கொள்கையில் இடம்பெற்றன. சூரிய சக்தியில் இருந்து, 3,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும், தமிழக அரசின், புதிய கொள்கைக்கு, சிறு, குறு மற்றும் பெரிய தொழில் முனைவோர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே, சூரிய மின் உற்பத்திக்கு, மத்திய அரசு வழங்கும் மானியத் தொகையை பெற, சிறு தொழில் முனைவோர்களுக்கு, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) விதிக்கும் புதிய நிபந்தனையால், சிறு தொழில் முனைவோர் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, சூரிய மின் உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது: சூரிய சக்தி மின் உற்பத்தியில் ஈடுபடும் சிறு தொழில் முனைவோர், மத்திய அரசு வழங்கும் மானியத்தை பெற, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமையில் இணைய வேண்டும். முதலில், இணைப்பு பதிவுக்கு கட்டணமாக(பாதுகாப்பு வைப்பு), ஒரு லட்சம் ரூபாய்க்கு வங்கி உத்தரவாதம் அல்லது வங்கி வரைவோலையாக வழங்கலாம் என, நடைமுறை இருந்தது. தற்போது, ஒரு லட்சம் ரூபாயை வங்கி வரைவோலையாக மட்டுமே செலுத்த வற்புறுத்துகின்றனர். தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின், இந்த அணுகு முறை, சிறிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக இல்லை.

இந்த அணுகுமுறை வேண்டாம் : வங்கி உத்தரவாதம் என்பது வங்கி அளிக்கும் சான்றிதழ். ஆனால், வரைவோலையாக வழங்குவது, முழுமையாக நடைபெறும் பண பரிமாற்றம். முதலீட்டுத் தொகையில் கணிசமான தொகையை அரசுக்கு செலு
த்திவிட்டால், முதலீட்டு பற்றாக்குறை ஏற்படும். இந்த அணுகுமுறையை அரசு கைவிட வேண்டும்.சிறுதொழில் முனைவோர், சூரிய மின் உற்பத்திக்கு, 10 லட்சம் ரூபாய் மானியம் பெறும் வரை, பாதுகாப்பு கட்டணத்தை உயர்த்தக் கூடாது. இல்லையெனில், சூரிய சக்தி மூலம், 3,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும், தமிழக முதல்வரின் புதிய முயற்சி பலனளிக்காமல் போய்விடும்.சூரிய சக்தி கொள்கையை செயல்படுத்தும் முன், தொழிலில் அனுபவம் வாய்ந்தோர் அடங்கிய குழுவை அமைத்து, சிறு தொழில் முனைவோரை பாதிக்கும் விஷயங்களை நீக்க வேண்டும். அதேபோல், குறிப்பிட்ட தொகையையாவது, மாநில அரசும் மானியமாக வழங்க வேண்டும். தமிழக அரசும் மானியம் வழங்கினால், பெருமளவு முதலீட்டாளர்கள், சூரிய சக்தி மின் உற்பத்திக்கு முன்வருவர். இவ்வாறு அவர் கூறினார்.

-நமது நிருபர்-

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்