பழநி: தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள, வெளிமாநில லாட்டரி விற்பனை, பழநியில் அமோகமாக நடக்கிறது. பணத்தை இழந்து பக்தர்கள், பொதுமக்கள் பரிதவிக்கின்றனர். பழநியில் கர்நாடக, ஆந்திரா,கேரள போன்ற வெளிமாநில லாட்டரிகள், "போலி' பரிசு டோக்கன் விற்பனை அதிகரித்துள்ளது. பழநி தாலுகா நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம், ஆயக்குடி, கீரனூர், அ.கலையமுத்தூர், மானூர் போன்ற பகுதிகளில் போலி பரிசு டோக்கன்கள், வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கின்றனர். பழநியில் குயில், சிங்கம், குமரன், ரோஜா, காரூண்யா, சவோரியன் என்ற பெயர்களில், பிற மாநில
லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகிறது. லாட்டரியை நேரடியாக விற்காமல், மளிகை, பேன்ஸி, டீ கடைகளில், பெயர், சீரியல் நம்பர் கொண்ட டோக்கன்களாக அச்சிட்டு, ஒன்று ரூ.10க்கு விற்கப்படுகிறது. பரிசு விழும் நபர்கள் டோக்கனை காட்டி
பரிசுத்தொகையை பெறுகின்றனர். பரிசு விழும் என்ற ஆசையில், லாட்டரிக்கு செலவு செய்து, ஊருக்கு செல்ல பணமில்லாமல், சில பக்தர்கள் புலம்புவதையும் காண முடிகிறது.மாதத்திற்கு மூன்று பேர் மீது லாட்டரி விற்றதாக போலீசார் வழக்குபதிவு
செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகள் விற்பனையை தடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.